உள்ளடக்கத்துக்குச் செல்

ஜன்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில், அமிருதபுரத்திலுள்ள அமிருதேசுவரர் கோயிலில் செதுக்கப்பட்டுள்ள ஜன்னாவின் படைப்புகள்

ஜன்னா (ஆங்கிலம்:Janna, கன்னடம் : ಮಹಾಕವಿ ಜನ್ನ) புகழ் பெற்ற கன்னடப் புலவர்களுள் ஒருவர். இவர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஹோய்சள அரசன் இரண்டாம் வீர பள்ளாளானின் அரசவையில் இருந்தவர். அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் பல கோயில்களைக் கட்டியவர். கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தைப் பெற்றவர். ’யசோதரா சரித்ரே’, ’அனந்தநாத புராணம்’ ஆகியவை இவரின் ஆக்கங்களுள் குறிப்பிடத்தக்கன. ஜைன மதம் தொடர்பான கருத்துகளைத் தம் பாடல்களில் வெளிப்படுத்தியவர்[1]. அனுபவ முகுரா என்ற காதல் நூலையும் இயற்றியவர். கேசிராஜா என்ற இலக்கண அறிஞரும், மல்லிகார்ஜுனா என்ற எழுத்தாளரும் இவரது உறவினர்கள் ஆவர்[2].

சான்றுகள்

  1. Shiva Prakash (1997), p. 204
  2. Nagaraj in Pollock (2003), p. 364
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜன்னா&oldid=1681822" இலிருந்து மீள்விக்கப்பட்டது