உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 17, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
CommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:57, 3 திசம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("TNUmap-ForestCover.jpg" நீக்கம், அப்படிமத்தை INeverCry பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்:)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பன்றிக் காய்ச்சல் என்பது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தை சேர்ந்த தீநுண்மத்தினால் வரும் ஒரு உயிரழிக்கும் நோயாகும். இந்நோய் இன்புலியன்சா A, இன்புலியன்சா B, மற்றும் இன்புலியன்சா C என்னும் மூன்று வகையான தீநுண்மத்தினால் ஏற்படுகிறது. இதில் இன்புலியன்சா A வினால் மிக அதிகமான அளவிலும், இன்புலியன்சா C னால் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது. இந்நோயை பரப்பும் தீ நுண்மம் மிகவும் அரிதான மரபு அணு தொகுதியை பெற்று இருப்பதால், இதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளார்கள். மார்ச் 2009 மெக்சிக்கோவில் பலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டது அறியப்பட்டது, அதைத் தொடர்ந்து பல நாடுகளுக்கு இந்த நோய் பரவியது.


தமிழ்நாடு வனத்துறை தமிழக மாநிலத்திற்குட்பட்ட காட்டுப் பகுதிகளின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் மேற்கொண்டு அவற்றின் வளர்ச்சியில் பங்கு கொள்கிறது. தமிழ்நாட்டின் வனப்பகுதி சுமார் 22,877 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது. இது தமிழ்நாட்டுப் புவிப்பரப்பளவில் 17.59% ஆகும். தமிழ்நாடு அரசு ஈரப்பதமுள்ள பசுமை மாறாக் காடுகள் முதல் குறை ஈரப்பதமுள்ள இலையுதிர் காடுகள் வரை தனது கவனத்தை செலுத்துகின்றது. அரிய விலங்குகள், பறவைகள், தாவரங்கள் ஆகியவற்றைக் பாதுகாப்பதில் தனிக் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு மாநில வனச் சட்டம், 1882, வனவுயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972, வனப் பாதுகாத்தல் சட்டம், 1980 மற்றும் அதன் துணை விதிகள் இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இவ்வனங்கள் வனத்துறையினரால் பாதுகாக்கப்படுகின்றது.