நனிநற்சமூகம்
Appearance
(யுட்டோபியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நனிநற்சமூகம் (utopia) என்பது கண்ணியமான அரசியலையும் சட்டங்களையும் கொண்டிருக்கும் கற்பனைச் சமூகம் (இலட்சிய சமுதாயம்) ஆகும். ஆங்கிலத்தில் இது யுட்டோபியா என்று அழைக்கப்படுகிறது
சர் தாமஸ் மோர் தான் 1516 ஆம் ஆண்டு எழுதிய யுட்டோபியா எனும் புத்தகத்தில் இச்சொல்லைப் பயன்படுத்தினார். இப்புத்தகம் அட்லாண்டிக் கடலில் இருந்ததானவொரு கற்பனைத் தீவைப் பற்றியது. சமுதாயம், அரசியல், மதம், சூழலியல் ஆகியவற்றின் அடிப்படையில் பல யுட்டோபியக் கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் இலட்சிய சமுதாயத்தை உருவாக்க முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியையே கண்டுள்ளன.