ஆர்த்தோ-அனிசிடின்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-மெத்தாக்சி அனிலின்[1] | |||
வேறு பெயர்கள்
ஆ-அனிசிடின்
2-அனிசிடின் ஆர்த்தோ-அமினோ அனிசோல் ஆ-மெத்தாக்சி அனிலின் 2-மெத்தாக்சி-1-அமினோபென்சீன் 2-மெத்தாக்சிபீனைலமீன் | |||
இனங்காட்டிகள் | |||
90-04-0 | |||
ChEBI | CHEBI:82288 | ||
ChEMBL | ChEMBL1612004 | ||
ChemSpider | 13860775 | ||
EC number | 201-963-1 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C19191 | ||
பப்கெம் | 7000 | ||
வே.ந.வி.ப எண் | BZ5410000 | ||
| |||
UNII | NUX042F201 | ||
UN number | 2431 | ||
பண்புகள் | |||
C7H9NO | |||
வாய்ப்பாட்டு எடை | 123.16 g·mol−1 | ||
தோற்றம் | மஞ்சள் நீர்மம், காற்றில் வெளிப்பட்டால் பழுப்பாக மாறும் | ||
அடர்த்தி | 1.0923 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 6.2 °C (43.2 °F; 279.3 K) | ||
கொதிநிலை | 224 °C (435 °F; 497 K) | ||
1.5 கி/100 மி.லி | |||
கரைதிறன் | எத்தனால், டை எத்தில் ஈதர், அசிட்டோன், பென்சீன் போன்ற கரைப்பான்களில் கரையும் | ||
-80.44•10−6 செ.மீcm3/mol | |||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | சாத்தியமுள்ள புற்றுநோய் ஊக்கி[2] | ||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H301, H311, H331, H341, H350 | |||
P201, P202, P261, P264, P270, P271, P280, P281, P301+310, P302+352, P304+340, P308+313, P311, P312 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 118 °C (244 °F; 391 K) (open cup) | ||
Autoignition
temperature |
415 °C (779 °F; 688 K) | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
2000 மி.கி/கி.கி (எலி, வாய்வழி) 1400 மி.கி/கி.கி (சுண்ட்டெலி,வாய்வழி) 870 மி.கி/கி.கி (முயல்,வாய்வழி)[3] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 0.5 மி.கி/மீ3 [தோல்][2] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
: Ca TWA 0.5 மி.கி/மீ3 [தோல்][2] | ||
உடனடி அபாயம்
|
50 மி.கி/மீ3[2] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
ஆர்த்தோ-அனிசிடின் (o-Anisidine) என்பது CH3OC6H4NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2-அனிசிடின் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இது நிறமற்ற நீர்மமாகும். ஆனால் வர்த்தக மாதிரிகள் காற்றில் ஆக்சிசனேற்றம் அடைகின்ற காரணத்தால் மஞ்சள் நிறத்தில் காணப்படலாம். மெத்தாக்சி குழுவைக் கொண்டுள்ள அனிலின் வழிப்பெறுதி மாற்றியன்கள் மூன்றில் இதுவும் ஒன்றாகும்.
தயாரிப்பும் பயன்களும்
[தொகு]2-குளோரோநைட்ரோபென்சீனை மெத்தனாற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி முதலில் ஆர்த்தோ-நைட்ரோ அனிசோல் தயாரிக்கப்பட்டு பின்னர் ஆர்த்தோ-அனிசிடின் தயாரிக்கப்படுகிறது.:[4]
- NaOCH3 + ClC6H4NO2 → CH3OC6H4NO2 + NaCl
வினையில் உருவாகும் ஆர்த்தோ-நைட்ரோ அனிசோல் ஒடுக்க வினைக்கு உட்படுத்தப்பட்டு ஆர்த்தோ அனிசிடின் தயாரிக்கப்படுகிறது.
சாயங்கள் தயாரிப்பில் ஆர்த்தோ அனிசிடின் பயன்படுகிறது. நைட்ரோயேற்றம் செய்யப்படும்போது இது 4-நைட்ரோ அனிசிடினைக் கொடுக்கிறது. ஆர்த்தோ-டையனிசிடின் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மம் 4-நைட்ரோ அனிசிடினாகும் மரங்களின் வைரக்கட்டையை அடையாளம் காட்டும் குறிகாட்டியாக பயன்பட்டுவது இதன் சிறப்பு பயன்பாடாகும். ஆர்த்தோ-அனிசிடினின் அமிலக் கரைசலுடன் சோடியம் நைட்ரைட்டு கரைசலைச் சேர்ப்பதன் மூலம் இதை டையசோனியம் உப்பாக மாற்றலாம். இந்த கலவை மரங்களில் பூசப்படுகிறது. வைரக்கட்டை பாலிபீனால்களுடன் வினையில் ஈடுபட்டு செம்பழுப்பு நிற அசோ சாயம் உருவாகிறது.
பாதுகாப்பு
[தொகு]சாயத் தொழிற்சாலைகளிலிருந்து கிடைக்கும் ஆர்த்தோ அனிசிடின் ஒரு அபாயகரமான மாசு ஆகும். வளப்பாதுகாப்பு மற்றும் மீட்பு சட்டம் இதை தீங்கிழைக்கும் கழிவாக வகைப்படுத்தி கே181 என்ற குறியீட்டை வழங்கியுள்ளது. [5] பன்னாட்டு புற்றுநோய் ஆராய்ச்சி ஆணையமும் ஆர்த்தோ-அனிசிடினை குழு 2பி வகை வேதிப்பொருளாக வகைப்படுத்தி சாத்தியமுள்ள புற்றுநோய் ஊக்கி என்றே கூறுகிறது. [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 669. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-00648. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
The names 'toluidine', 'anisidine', and 'phenetidine' for which o-, m-, and p- have been used to distinguish isomers, and 'xylidine' for which numerical locants, such as 2,3-, have been used, are no longer recommended, nor are the corresponding prefixes 'toluidine', 'anisidino', 'phenetidine', and 'xylidino'.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0034". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ "o-Anisidine". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Gerald Booth (2007). "Nitro Compounds, Aromatic". Weinheim: Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a17_411. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3527306732.
{{cite book}}
: Missing or empty|title=
(help); Unknown parameter|encyclopedia=
ignored (help) - ↑ "Hazardous Waste". 2015-07-23.
- ↑ "O-Anisidine".
புற இணைப்புகள்
[தொகு]- International Chemical Safety Card 0970
- "NIOSH Pocket Guide to Chemical Hazards #0034". National Institute for Occupational Safety and Health (NIOSH).