இசுரேல் எண்ணெய்க் கசிவு, 2014
2014 இஸ்ரேலில் எண்ணெய்க் கசிவு இஸ்ரேலில் 2014இல் ஏற்பட்ட மாபெரும் எண்ணெய்க் கசிவாகும்.
பெரிய அளவிலான கசிவு
[தொகு]டிசம்பர் 2014ல் 3.5 மில்லியன் லிட்டர் அளவிலான [1] கச்சா எண்ணெயானது ஒரு உடைந்த குழாயில் இருந்து வெளியேறி ஒரு பெரிய அளவிலான எண்ணெய் கசிவினை இஸ்ரேலின் [2] Be"er Ora [3] என்ற இடத்தில் ஏற்படுத்தியது. இந்நிகழ்வு இயற்கையாய் அமைந்த EVRONA இருப்பிலிருந்து பெருமளவு எண்ணெயினைக் குறைத்தது. இந்த நிகழ்வினால் ஏற்பட்ட கசிவை வெளியேற்றி தூய்மைப்படுத்த பல ஆண்டுகள் ஆகும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறினார். [4][5]
அமைச்சர்கள் மாற்றம்
[தொகு]இது தொடர்பாக டிசம்பர் 9, 2014 அன்று ஆப்ர் அகுனிஸ் என்பவர் துணை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மந்திரியாக நியமிக்கப்படார். அமீர் பெரேட்ஸ் பதவியை இராஜினமா செய்ததை அடுத்து அமைச்சரவையில் அகுனிஸ் பதவியேற்றார்.[6]
இஸ்ரேலின் அராவா பகுதியில் ஏற்பட்ட பெருமளவிலான எண்ணெய்க் கசிவினைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் பிரதம மந்திரி பென்ஞமின் நெந்தன்யாகுவின் அலுவலகத்தில் இந்நியமனம் இயற்றப்பட்டது. பதவியேற்ற அகுனிஸ் கூறுகையில், " தெற்கில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பேரழிவு சிகிச்சைக்கு முன்னுரிமை அளிப்பதும், கச்சா எண்ணெய் பரவுதலை தடுப்பதும், சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுப்பதும், துணை அமைச்சரின் நோக்கம்" எனக் கூறினார். [7]
தொடர் பணிகள்
[தொகு]வெள்ளத் தடுப்பிற்கென அராவாவில் கட்டப்பட்ட அணைகளின் பக்கச் சுவர்களை உயர்த்துவதற்கு அகுனிஸ் தனது குழுவினருக்கு ஆணையிட்டார். இதன் மூலம் கச்சா எண்ணெயானது எலிட் வளைகுடாவை எட்டிவிடும் ஆபத்து பெருமளவு குறைந்தது. காற்றின் மாசுபடுத்தி தரநிலை சோதனைகளின் மூலம் மாசுபடுத்திகளின் அளவுகள் கட்டுப்படுத்தப்பட்ட அளவினை எட்டும் வரை இருப்புகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 2014 டிசம்பரின் முடிவில், அந்நாட்டு அரசாங்கம் புனர்வாழ்வளிக்கும் திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 17 மில்லியன் வழங்கியுள்ளது. எண்ணெய்க் கசிவு நிகழ்ச்சியின் காரணமாக மண்ணிற்கு ஏற்பட்டை பாதிப்பினை சீர்செய்யவும், பாதிக்கப்பட்ட வன உயிரினங்களை மீட்டெடுத்து நல்வாழ்வு கொணரவும், 17 மில்லியன் செலவிடப்பட்டது. ஒரு சிறப்பு குழு நியமிக்கப்பட்டு அது எலைட் அஷெலோன் பைப்லைன் நிறுவனத்தின் நடவடிக்கைகள் கடற்கரை மற்றும் நிலப்பகுதியில் ஏற்படுத்திய தாக்கத்தை அளவிட பணிக்கப்பட்டது. இப்புனரமைப்புத் திட்டத்தில் மூடிய எலைட் கடற்கரையினை EAPC-க்குச் சொந்தமான சொத்துக்களை நகரின் குடியிருப்பாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சமர்ப்பிக்கும் திட்டமும் அடங்கும். [8] இதன் விளைவாக ஜனவரி 2015ல் நடத்தப்பட்ட காற்று மாசுபடுத்தி தரநிலை சோதனையின் முடிவில் EVRONA நிகழ்வில் 90% மாசுபாடு குறைந்துள்ளதாக கண்டறிப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Clean-up of Israeli desert oil spill could take years: experts". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2017-09-11.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ http://www.ynetnews.com/articles/0,7340,L-4600972,00.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-18. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
- ↑ "Israel Oil Spill: 600,000-Gallons Lost in Eilat Pipeline Breach".
- ↑ "UPDATE 1-Oil spill floods into Israeli nature reserve". Archived from the original on 2015-07-28. பார்க்கப்பட்ட நாள் 2017-09-11.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Minister". sviva.gov.il.
- ↑ "Ofir Akunis Appointed Deputy Environmental Protection Minister". sviva.gov.il.
- ↑ "Government approves NIS 17 million fund for Arava oil spill rehabilitation « Pacific Piano Performance Posts". kristinelmingforum.net. Archived from the original on 2015-01-28. பார்க்கப்பட்ட நாள் 2017-09-11.