உள்ளடக்கத்துக்குச் செல்

ஒட்டகப் படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1915 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரின் முதல் சுயஸ் கால்வாய் தாக்குதலின் போது பீர்சேபாவில் உதுமானியப் பேரரசின் ஒட்டகப் படைகள்.

ஒட்டகப்படை (Camel cavalry) என்பது ஒட்டகங்களை போக்குவரத்து வழிமுறையாகப் பயன்படுத்தும் படைத்துறைக்கான பொதுவான பெயர். சில நேரங்களில் போர்வீரர்கள் ஒட்டகத்தின் முதுகில் இருந்து ஈட்டிகள், வில்–அம்பு அல்லது துப்பாக்கிகள் மூலம் சண்டையிட்டனர்.

ஒட்டகப் படை மத்திய கிழக்கில் வரலாறு முழுவதும் பாலைவனப் போரில் ஒரு பொதுவான அங்கமாக இருந்தது. வழக்கமான குதிரைப் படையின் குதிரைகளை விட வறண்ட சூழலில் வேலை செய்வதற்கும் உயிர்வாழ்வதற்கும் இவை மிகவும் பொருத்தமானவையாக இருந்தன. எரோடோட்டசின் கூற்றுப்படி ஒட்டகத்தின் வாசனை பிடிக்காமல் குதிரைகள் மிரண்டு ஓடும் என்பதால் திம்ப்ரா போரில் அகாமனிசியர்கள் பெர்சியர்களின் குதிரைப்படைக்கு எதிராக ஒட்டகங்களை பயன்படுத்தினர்.[1][2]

ஆரம்பகால வரலாறு

[தொகு]
பீகாரில் ஒட்டக சவாரி செய்யும் ஓர் புர்பியா வீரனின் ஓவியம், 1825

அரபு மன்னர் கிண்டிபு என்பவரால் ஒட்டகம் முதலில் இராணுவத்திற்குப் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது. கிமு 853 இல் கார்கார் போரில் 1,000 ஒட்டகங்களை ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. கிமு 547இல் சைரசு மற்றும் லிடியாவின் கிரீசசு ஆகியோருக்கு இடையே நடந்த திம்ப்ரா போரில் இவை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. செனபோனின் கூற்றுப்படி, சைரசின் படை எண்ணிக்கையில் ஒட்டகப் படை குதிரைப்படைகளைவிட அதிகமாக இருந்தது. தொழில்நுட்ப ரீதியாக குதிரைப்படையாக பயன்படுத்தப்படவில்லை என்றாலும், ஒட்டகங்களின் வாசனையும் தோற்றமும் லிடியாவின் குதிரைப்படையை பீதியடையச் செய்ததிலும், போரை சைரசுக்கு சாதகமாக மாற்றியதிலும் முக்கியமானதாக இருந்தது என்று கூறப்பட்டது.[3]

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பின் போது பாரசீக மன்னர் முதலாம் செர்கஸ் தனது பெரும் இராணுவத்தில் ஏராளமான அரபு கூலிப்படையினரை -அம்புகளுடன் ஒட்டகங்களில் ஏற்றப்பட்டனர். லிபிய தேரோட்டிகளின் ஒரு பெரிய படை உட்பட அரபு ஒட்டகப் படை இருபதாயிரம் என்ற எண்ணிக்கை வரை இருந்ததாக எரோடோட்டசு குறிப்பிடுகிறார். அரேபியா மற்றும் சிரியாவின் நாடோடி பழங்குடியினரிடமிருந்து பணியமர்த்தப்பட்ட, பாரசீக இராணுவ சேவையில் சேர்ந்த கூலிப்படையினர் ஒட்டகத்தின் மீது ஏறி சண்டையிடும் வில்லாளர்களாக மாறினர். சில சமயங்களில் ஒரு ஒட்டகத்திற்கு இருவர் சவாரி செய்தனர்..[4]

எரோடியனின் கூற்றுப்படி, பார்த்திய மன்னர் நான்காம் ஆர்டபானஸ் ஈட்டிகளுடன் கூடிய கவச வீரர்களைக் கொண்ட ஒட்டப் பிரிவைப் பயன்படுத்தினார்.

உரோமானியப் பேரரசு 2ஆம் நூற்றாண்டில் அரேபிய எல்லையில் ஒட்டகச் சவாரி செய்பவர்களைப் பயன்படுத்தியது.[5] இவற்றில் முதலாவது, பல்மைராவிலிருந்து பேரரசர் திராயானின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். உரோமானியப் பேரரசின் பிற்பகுதியில் அரபு ஒட்டகத் துருப்புக்கள் பாதுகாப்பிற்காகவும், பாலைவனக் காவல் மற்றும் சாரணப் பணிகளுக்காகவும் பணியமர்த்தப்பட்டன.[6] பாரசீக பாணியில் நீண்ட வாள்கள், வில்கள் மற்றும் கத்திகள் ஆகியவை சாதாரண ஆயுதங்களில் அடங்கும்.[7]

அறபுத் தீபகற்பத்தில் இசுலாசுத்திற்கு முந்தைய நாகரிகங்களால் ஒட்டகம் ஒரு சுமைதூக்கியாகப் பயன்படுத்தப்பட்டது.[8] முகம்மது நபி மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களின் ஆரம்பப் படையெடுப்புகளில் ஒட்டகங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.[9] அதைத் தொடர்ந்து, அரேபியர்கள் தங்கள் சாசானிய மற்றும் பைசாந்திய எதிரிகளை முறியடிக்க ஒட்டகப் படையைப் பயன்படுத்தினர்.[10]

சீன பௌத்த யாத்ரீகர் சுவான்சாங்கின் கூற்றுப்படி கோக் துருக்கியர்கள் ஒட்டகப் படையைப் பயன்படுத்தினர்.[11]

நவீன யுகம்

[தொகு]
அரேபிய தீபகற்பத்தில் இக்வான் இராணுவத்தின் பெடோயின் வீரர்கள்
1930களில் சோமாலியாவில் இத்தாலிய துபாத்துகள்

எகிப்து மற்றும் சிரியாவில் தனது பிரெஞ்சு படையெடுப்பிற்காக நெப்போலியன் ஒரு ஒட்டகப் படையை பயன்படுத்தினார். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியிலும், ஒட்டகத் துருப்புக்கள் பிரிட்டன், பிரெஞ்சு, ஜெர்மன், எசுப்பானியா மற்றும் இத்தாலிய காலனித்துவப் படைகளில் பாலைவனக் காவல் மற்றும் ரோந்து பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய பிரிவுகளின் வழியில் வந்தவர்கள் இன்றும் நவீன மொராக்கோ, எகிப்திய படைகள் மற்றும் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒரு பகுதியாக உள்ளனர்.

1898 ஆம் ஆண்டு ஓம்துர்மன் போரில் பிரிட்டிஷ் ஆதரவு எகிப்திய ஒட்டகப் படை குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது.[12] முதலாம் உலகப் போருக்கு முன்னும் பின்னும் உதுமானிய இராணுவம் ஒட்டகப் படைகளை அதன் ஏமன் மற்றும் ஹெஜாஸ் படைகளின் ஒரு பகுதியாக பராமரித்தது.

இத்தாலியர்கள் தங்கள் இத்தாலிய சோமாலியாவில் துபாத் ஒட்டக துருப்புக்களைப் பயன்படுத்தினர்.

எசுப்பானிய மொராக்கோ காலனித்துவ அதிகாரிகள், பாதுகாக்கப்பட்ட மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ளூரில் சேர்த்த ஒட்டகப் படைகளை, முக்கியமாக 1930 முதல் 1956 வரை நடந்த எசுப்பானிய உள்நாட்டுப் போரில் எல்லை ரோந்து பணிகளுக்குப் பயன்படுத்தினர்.[13]

ஜோர்டானிய பாலைவன ரோந்துப் படை இன்றும் ஒட்டகங்களைப் பயன்படுத்துகிறது.[14]

1900 ஆம் ஆண்டில் பாக்சர் கிளர்ச்சியின் போது சீனா, சோமாலிலாந்து போரின் போது 1902 முதல் 1904 வரை சோமாலிலாந்திலும், 1915 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போரின் மத்திய கிழக்கிலும் எகிப்திலும் போராடிய பிகானேர் ஒட்டகப் படை என்று அழைக்கப்படும் ஒரு பிரிவை பிகானேர் இராச்சியம் பராமரித்தது. அங்கு அவர்கள் சூயஸ் கால்வாய் மீதான போரின் போது துருக்கியப் படைகளை ஒட்டகப் படைகளைக் கொண்டு அதை அழித்தனர்.

அப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த ஜெய்சல்மேர் சமஸ்தானத்தின் துணைப் பாதுகாப்புப் படைகளும் 1948 இல் ஒட்டகத்தில் ஏற்றப்பட்ட பாதுகாப்பு படைப்பிரிவை நிறுவின.[15] இவை 1947-1948 இன் இந்திய-பாகிஸ்தான் போரின் போது போக்குவரத்து நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டன. 1951 ஆம் ஆண்டு உள்ளூர் இராஜஸ்தானி படைகள் இந்திய இராணுவத்தின் காலாட்படை படைப்பிரிவுடன் இணைக்கப்பட்டபோது இரண்டு ஒட்டகப் பிரிவுகளும் இந்திய இராணுவத்தின் காலாட் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டன. மேலும் இந்த படைப்பிரிவில் அதன் 13 வது பட்டாலியனாக இணைக்கப்பட்டன.[16] 1965ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தான் படைகள் பிக்கானேர் மற்றும் ஜெய்சால்மர் பகுதிகளில் போர் நிறுத்தத்திற்கு முன்னும் பின்னும் பேச்சுவார்த்தை நடத்த பயன்படுத்தப்பட வேண்டிய பகுதிகளுக்குள் ஊடுருவி அதைக் கைப்பற்றுவதைத் தடுத்த படைகளால் அவை போக்குவரத்து மற்றும் சண்டை ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்பட்டன.[15] பல இந்திய இராணுவ ஒட்டகங்களும் 1965 போருக்குப் பின்னர் எல்லை பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்டன.[17][15]1967 ஆம் ஆண்டில், ஒரு ஒட்டகப் பீரங்கி படைப்பிரிவு, உருவாக்கப்பட்டது.[18][15][17] அதே ஆண்டில், 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போரில் ஒட்டகங்கள் மீண்டும் தரைப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் ப்டை வீரர்களால் பயன்படுத்தப்பட்டன.[17] [19] இறுதியாக 1975இல் இந்திய ராணுவம் ஒட்டகங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தியது.[15]

இராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள தார்ப் பாலைவனத்தின் தொலைதூரப் பகுதிகளில் ரோந்து செல்வதற்கு எல்லை பாதுகாப்பு படையில் ஒட்டகங்கள் இன்றைக்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஒட்டகங்கள் 5 முதல் 6 வயதுக்கு இடையில் வாங்கப்பட்டு ஜோத்பூரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் எல்லைப்புற தலைமையகத்தில் உள்ள ஒட்டகப் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இவைகள் 15-16 ஆண்டுகள் பணியாற்றுகிறன. 21 வயதில் பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றன. எல்லைப் பாதுகாப்புப் படை பயன்படுத்தும் ஒட்டகங்கள் மூன்று வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. 1976 முதல் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லியில் நடைபெறும் அணிவகுப்பில் ஆண்டுதோறும் எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒட்டகக் குழு பங்கேற்கிறது. 1986 முதல் 1989 வரை அதன் தலைமை இயக்குநராக இருந்த கே. எஸ். ரத்தோர் ஒட்டக இசைக்குழுவின் திறன்களை மேம்படுத்தினார். ஒட்டகக் குழுவில் இரண்டு குழுக்கள் உள்ளன. ஒன்று எல்லைக் காவலர்களால் சவாரி செய்யப்படும் ஒட்டகங்கள், மற்றொன்று எல்லை பாதுகாப்பு படை ஒட்டகக் குழு, இதில் ஒட்டகங்கள் நடந்து செல்லும் இசைக்கலைஞர்களுடன் நடந்து செல்கின்றன. ஒட்டகக் குழுவின் அணிவகுப்பின் போது இந்த இரண்டு கூறுகளும் ஒன்றாக செயல்படுகின்றன. இந்தக் குழுவில் பொதுவாக 90 ஒட்டகங்கள் உள்ளன .[20][21][22]

வருடாந்திர குடியரசு நாள் அணிவகுப்பின் போது இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒட்டகக் குழு.
உளவு பணிகளில், ஒட்டகங்கள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன். இங்கே, எத்தியோப்பியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் தூதுக்குழுவும் எரித்திரிய படையும் எரித்திரியாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு காட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. Herodotus (440 BC). The History of Herodotus. Rawlinson, George (trans.). பார்க்கப்பட்ட நாள் 4 December 2012. He collected together all the camels that had come in the train of his army to carry the provisions and the baggage, and taking off their loads, he mounted riders upon them accoutred as horsemen. These he commanded to advance in front of his other troops against the Lydian horse; behind them were to follow the foot soldiers and, last of all, the cavalry. When his arrangements were complete, he gave his troops orders to slay all the other Lydians who came in their way without mercy but to spare Croesus and not kill him, even if he should be seized and offer resistance. Cyrus opposed his camels to the enemy's horse because the horse has a natural dread of the camel, and cannot abide either the sight or the smell of that animal. By this stratagem he hoped to make Croesus's horse useless to him, the horse being what he chiefly depended on for victory. The two armies then joined battle, and immediately, the Lydian war-horses, seeing and smelling the camels, turned round and galloped off, and so it came to pass that all Croesus' hopes withered away.{{cite book}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. "Cameliers and camels at war". New Zealand History online. History Group of the New Zealand Ministry for Culture and Heritage. 30 August 2009. பார்க்கப்பட்ட நாள் 5 December 2012.
  3. Jim Hicks, page 21 "The Persians", Time-Life Books, 1975
  4. Cassin-Scott, Jack (June 1977). The Greek and Persian Wars 500-323 BC. Bloomsbury USA. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85045-271-6.
  5. D'Amato, Rafaele (23 May 2017). Roman Army Units in the Eastern Provinces (1). Bloomsbury USA. p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4728-2176-8.
  6. Esposito, Gabriele (3 May 2016). The Late Roman Army. Winged Hussar. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9963657-9-6.
  7. Cassin-Scott, Jack (2022). Roman Army Units in the Eastern Provinces (2). Bloomsbury USA. pp. 37–38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4728-5049-2.
  8. Nicolle, David (26 March 1991). Rome's Enemies 5. The Desert Frontier. Bloomsbury USA. pp. 20 & 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85532-166-1.
  9. Mubarakpuri, Saifur Rahman Al (2005), The sealed nectar: biography of the Noble Prophet, Darussalam Publications, p. 246, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9960-899-55-8
  10. Nicolle, David (29 July 1982). The Armies of Islam 7th-11thm Centuries. Bloomsbury USA. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 085045-448-4.
  11. Adapted from Watters I:74,77.
  12. Tauris, I. B. (28 April 2016). Kitchener. Hero and Anti-Hero. Bloomsbury Academic. pp. 84–85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78453-350-2.
  13. Jose M. Bueno, pages 155–156, Uniformes Militares de la Guerra Civil Espanola, Liberia Editorial San Martin, Madrid 1971
  14. Jordan's Bedouin 'desert forces' - Middle East - Al Jazeera English. 2010
  15. 15.0 15.1 15.2 15.3 15.4 Rikhye, Ravi (2003). "The Indian Army's Camel Troops 1948–75". Orders of Battle. Archived from the original on 14 June 2006.
  16. "Rajputs State forces to modern Indian Army: A millennium of military service". Rajput Community Forum (in ஆங்கிலம்). 2020-01-05. பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.
  17. 17.0 17.1 17.2 Menon, Aparna (2015-12-01). "Did you know The Border Security Force has a camel band? Here's all about BSF and Its Camels". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
  18. "The 1971 Battle of Longewala: A night of confusion, Sam Manekshaw's order, Pakistan's folly". 3 December 2019.
  19. "Years later, Longewala reminds the do-or-die battle | Jaipur News – Times of India". 18 December 2013. 
  20. "BSF to buy over 300 camels for patrolling Indo-Pak border". The Times of India. 2022-12-29. https://timesofindia.indiatimes.com/city/jaipur/bsf-to-buy-over-300-camels-for-patrolling-indo-pak-border/articleshow/96584208.cms?from=mdr. 
  21. Menon, Aparna (2015-12-01). "Did you know The Border Security Force has a camel band? Here's all about BSF and Its Camels". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
  22. "News Headlines, English News, Today Headlines, Top Stories". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டகப்_படை&oldid=4170582" இலிருந்து மீள்விக்கப்பட்டது