கிமு 6-ஆம் நூற்றாண்டு
Appearance
கி.மு. 6-ஆம் நூற்றாண்டு (6th century BC) என்பது கி.மு. 600-ஆம் ஆண்டின் முதல் நாளில் இருந்து கி.மு. 501-ஆம் ஆண்டின் கடைசி நாளன்று முடிவடைந்த காலப்பகுதியைக் குறிக்கும்.
இந்நூற்றாண்டில் அல்லது சிறிது காலத்தின் பின்னர் இந்தியாவின் பாணினியில் சமக்கிருத இலக்கணம் எழுதப்பட்டது[1].
பாபிலோனியப் படைகள் எருசலேமைக் கைப்பற்றின. பாபிலோனியர்களின் ஆட்சி பின்னர் 540களில் பேரரசர் சைரசுவினால் கவிழ்க்கப்பட்டு, அகாமனிசியப் பேரரசு உருவாக்கப்பட்டது. பாரசீக இராச்சியம் விரிவாக்கப்பட்டது.
இரும்புக் காலத்தில், கெல்ட்டியர் விரிவு இடம்பெற்றது.
நிகழ்வுகள்
[தொகு]- பாரசீகர் பண்டைய எகிப்தைக் கைப்பற்றினார்கள், கிழக்கு நடுநிலக் கடல் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
- கார்த்தேசுவின் வணிக இராச்சியம் சிறிது சிறிதாக மேற்கு நடுநிலக் கடல் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.
- உரோமக் குடியரசு உருவாக்கப்பட்டது.
- யூதா இராச்சியத்தின் அழிவும், முதல் யெருசலேம் கோயிலின் அழிவும் (கிமு 586), பல தசாப்தங்களுக்குப் பின்னர் யூதர்கள் திரும்பிவருதல்.
- புத்தர், இந்தியாவில் பௌத்த சமயத்தை உருவாக்கினார்.
- கன்பூசியஸ், கன்பூசியம் என அழைக்கப்படும் நீதிநூல் முறைமையை உருவாக்கினார், இது சீனாவில் பெரும் செல்வாக்குப் பெற்றது.
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]- புத்தர்
- கன்பூசியஸ்
- மஹா சைரஸ் - பாரசீகத்தின் அரசன்
- தாலெஸ் (Thales) கிரேக்கக் கணிதர். கிரகணமொன்றை எதிர்வுகூறினார்.
- பைதகரஸ், கிரேக்கக் கணிதர். பைதகரசின் தேற்றம் பார்க்க.
- மகாவீரர், 24வது தீர்த்தங்கரர், (கிமு 599–கிமு 527)
- கிமு 563 — புத்தரின் தாய் மாயா இறப்பு
- சுன் சூ, போர்க்கலை நூலாசிரியர்
- லாவோ சீ