குரூண் தொடருந்து நிலையம்
குரூண் Gurun | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
குரூண் தொடருந்து நிலையம் | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | குரூண், கெடா, மலேசியா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 5°49′11″N 100°28′42″E / 5.819722°N 100.478333°E | |||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | |||||||||||||||
தடங்கள் | 1 மலாயா மேற்கு கடற்கரை ETS கேடிஎம் இடிஎஸ் | |||||||||||||||
நடைமேடை | 2 தீவு மேடைகள் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 5 | |||||||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 1915 | |||||||||||||||
மறுநிர்மாணம் | 2014 | |||||||||||||||
மின்சாரமயம் | 2015 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
குரூண் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Gurun Railway Station மலாய்: Stesen Keretapi Gurun); சீனம்: 古伦火车站) என்பது தீபகற்ப மலேசியா, கெடா மாநிலத்தின் குரூண் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் குரூண் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), கெடா மாநிலத்தின் குரூண் நகரில் இந்த நிலையம் உள்ளது.
பொது
[தொகு]சூலை 2016-இல் கேடிஎம் கொமுட்டர் சேவையின் வடக்குப் பகுதியின் வடக்கு முனையமாக பாடாங் பெசார் நிலையத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்பாக குரூண் தொடருந்து நிலையம் தான் வடக்குப் பகுதியின் வடக்கு முனையமாக இருந்தது.
ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக குரூண் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 11 சூன் 2014 அன்று மீண்டும் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம், கேடிஎம் இடிஎஸ்; கேடிஎம் கொமுட்டர் நிறுவனங்களின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது. மரத் தூண்களால் கட்டப்பட்ட பழைய நிலையம் இடிக்கப்பட்டு விட்டது.