உள்ளடக்கத்துக்குச் செல்

குவாதலூப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கௌதலூபே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குவாதலூப்பு
Guadeloupe
வெளிநாட்டுப் பிராந்தியமும் பிரான்சின் மாவட்டமும்
குவாதலூப்பு Guadeloupe-இன் கொடி
கொடி
குவாதலூப்பு Guadeloupe-இன் சின்னம்
சின்னம்
நாடு பிரான்சு
நிலப்பகுதிபாசு-தெர்
மாவட்டங்கள்1
அரசு
 • பிராந்தியப் பேரவைத் தலைவர்ஏரி காலுசு
பரப்பளவு
 • மொத்தம்1,628 km2 (629 sq mi)
 • நிலம் km2 (Formatting error: invalid input when rounding sq mi)
 • நீர் km2 (Formatting error: invalid input when rounding sq mi)
மக்கள்தொகை
 (சனவரி 2013)[1][note 1]
 • மொத்தம்4,02,119
 • அடர்த்தி250/km2 (640/sq mi)
இனம்குவாதலூப்பர்
நேர வலயம்ஒசநே-04 (ECT)
ஐஎசுஓ 3166 குறியீடுGP
மொ.உ.உ (2012)[2]25-வது தரவரிசை
மொத்தம்€8.03 பில்லியன் (US$10.3 பில்.)
தலைக்கு€19,810 (US$25,479)
NUTS பிராந்தியம்FRA
இணையதளம்www.guadeloupe.pref.gouv.fr
www.cr-guadeloupe.fr
www.cg971.fr

குவாதலூப்பு (Guadeloupe, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[ɡwadəlup], குவாதலூப்) என்பது கரிபியன் பகுதியில் சிறிய அண்டிலிசுவின் ஒரு பகுதியான லீவர்டு தீவுகளில் அமைந்துள்ள பிரான்சிய மண்டலத் தீவுக்குழு ஆகும். 1,628 சதுரகிமீ பரப்பு நிலத்தைக் கொண்டுள்ள இத்தீவின் மக்கள் தொகை ஏறத்தாழ 400,132 (சனவரி 2015) ஆகும். வட அமெரிக்காவில் மக்கள்தொகை அடர்த்தி கூடிய ஐரோப்பிய ஒன்றியப் பகுதி இதுவாகும்.[3][note 1]

குவாதலூப்பின் இரண்டு முக்கிய தீவுகளில் பாசு-தெர் மேற்கேயும், கிராண்ட்-டெர் கிழக்கேயும் அமைந்துள்ளன. இவையிரண்டும் குறுகிய நீரிணை ஒன்றினால் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையே பாலங்கள் வழியே போக்குவரத்து இடம்பெறுகின்றன. இவ்விரண்டும் பொதுவாக ஒரே தீவாகக் குறிக்கப்படுகிறது. இவற்றைவிட மரீ-கலான்ட், லா ரேசிடாரே, சான்டெசு தீவுகள் என சிறிய தீவுகளும் உள்ளன.

பிரான்சின் ஏனைய வெளிநாட்டு மண்டலங்களைப் போன்று, குவாதலூப்பும் ஐரோ வலயத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு தொகுதியாகும். இதன் அதிகாரபூர்வமான நாணயம் யூரோ ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமகன் ஒருவர் எவ்விதக் கட்டுப்ப்பாடும் இன்றி இங்கு வந்து நிரந்தரமாகக் குடியேற முடியும். ஆனாலும், இந்த வெளிநாடு மண்டலம் ஐரோப்பாவின் ஷெங்கன் பரப்பு நாடுகளுக்குள் அடங்கவில்லை. குவாதலூப்பின் தலைநகர் பாசு-தெர் ஆகும். இது பாசு-தெர் தீவில் அமைந்துள்ளது. அதிகாரபூர்வ மொழிகள் பிரெஞ்சு, அந்தீலிய கிரியோல் மொழிகள் இங்கு அனைவராலும் பேசப்படுகின்ற மொழிகளாகும்.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 செயிண்ட் மார்ட்டின், செயிண்ட்-பார்த்தலெமி தவிர்த்து. இவை குவாதலூப்பில் இருந்து 2007 பெப்ரவரி 22 இல் பிரிந்தன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. INSEE. "Recensement de la population en Guadeloupe - 402 119 habitants au 1er janvier 2013" (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 21-05-2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. INSEE. "Produits intérieurs bruts régionaux et valeurs ajoutées régionales de 1990 à 2012". பார்க்கப்பட்ட நாள் 2014-03-04.
  3. INSEE. "Estimation de population par région, sexe et grande classe d'âge - Années 1975 à 2015" (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 11-11-2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாதலூப்பு&oldid=3929129" இலிருந்து மீள்விக்கப்பட்டது