உள்ளடக்கத்துக்குச் செல்

சித்திரதுர்க்கா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்திரதுர்க்கா மாவட்டம்
ಚಿತ್ರದುರ್ಗ ಜಿಲ್ಲೆ
மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகம்
பகுதிபெங்களூர்
தலைநகரம்சித்ரதுர்கா
வருவாய் வட்டம்சித்திரதுர்க்கா, ஹிரியூர், ஹொசதுர்கா, மொளகால்மூரு, சள்ளகேரே, ஹொளல்கெரே
பரப்பளவு
 • மொத்தம்8,440 km2 (3,260 sq mi)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்16,59,456
 • அடர்த்தி200/km2 (510/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30
தொலைபேசிக் குறியீடு+ 91 (8194)
வாகனப் பதிவுKA-16
பால் விகிதம்974 ஆண்கள்/பெண்
கல்வியறிவு64.5%
இணையதளம்https://chitradurga.nic.in/en/

சித்திரதுர்க்கா மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[2] இதன் தலைமையகம் சித்திரதுர்க்கா நகரத்தில் உள்ளது. வேதவதி, துங்கபத்திரை ஆகிய நதிகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன.

அமைவிடம்

[தொகு]

இம்மாவட்டம்தென்கிழக்கிலும், தெற்கிலும் தும்கூர் மாவட்டத்தையும், தென்மேற்கில் சிக்மகளூர் மாவட்டத்தையும், மேற்கில் தாவண்கரே மாவட்டத்தையும், வடக்கில் பெல்லாரி மாவட்டத்தையும், கிழக்கில் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

இம்மாவட்டம் 6 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.

  1. சித்திரதுர்க்கா
  2. ஹிரியூர்
  3. ஹொசதுர்கா
  4. மொளகால்கேரே
  5. சள்ளகேரே
  6. ஹொளல்கெரே

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,659,456 ஆகும். அதில் 840,843 ஆண்கள் மற்றும் 818,613 r பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 974 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 73.71 % ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 91.63 %, இசுலாமியர் 7.76 %, சமணர்கள் 0.23 %, கிறித்தவர்கள் 0.19 % மற்றும் பிறர் 0.20% ஆக உள்ளனர்.[3]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "District at a Glance". Chitradurga district website. பார்க்கப்பட்ட நாள் 3 January 2011.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.
  3. Chitradurga District - Population 2011

வெளியிணைப்புக்கள்

[தொகு]