உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் எண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் எண்கள், இந்திய-அரேபிய எண்கள் இரண்டையும் பயன்படுத்தும் ஒரு மைல்கல் (தஞ்சாவூர் அருங்காட்சியகம்)
ஒன்று என எழுதப்பட்ட எல்லைக்கல், இடம்: சேலம் அருங்காட்சியகம்

தமிழ் எண்கள் என்பது தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கும். இவை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் கிரந்த எழுத்து முறை ஆகும். இவ்வெண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும். தமிழ் எண்களும் கிரந்த எண்களும் ஒரே எண் வடிவைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கிரந்த எண்களைப்போல் தமிழில் சுழியம் கிடையாது. தமிழ் எண்கள் தற்போது பெருவழக்கில் இல்லை, தமிழில் எண்களை எழுத இந்திய-அரேபிய எண்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

எண் வடிவங்கள்

[தொகு]
1 2 3 4 5 6 7 8 9 10

தமிழ் எண்களில் பழங்காலத்தில் சுழியம் (பூஜ்யம்) இல்லாமல் போயினும், தற்காலத்தில் சுழியம் தமிழில் எண்களை எழுதும் போது பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1825ஆம் ஆண்டு வெளி வந்த கணித தீபிகை என்னும் நூல் கணித செயல்பாடுகளை எளிமையாக்கும் பொருட்டு தமிழில் சுழியம் அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறுகிறது.[1] ஒருங்குறியின் 4.1 பதிப்பில் இருந்து தமிழ் எண் சுழியம் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தும் முறை

[தொகு]

தொடக்கத்தில் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் (Positional System) எழுதப் பயன்படுத்தப்படவில்லை. 10, 100, 1000 ஆகியவற்றுக்குத் தனித்தனி குறியீடுகள் இருப்பதைக்கொண்டு இதை அறியலாம். தமிழ் எண்கள் எழுத்தால் எழுதப்படும் எண்களைச் சுருக்குவதற்கான குறியீட்டு முறையாகவே (Abbreviational System) பயன்படுத்தப்பட்டது. சுழியம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்தான் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் எழுதப்பட ஆரம்பித்தது.[2]

உதாரணமாக, இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்று என்பது பழைய முறையின் படி, ௨௲௪௱௫௰௩ என எழுதப்பட்டது.

அதாவது,

இரண்டு-ஆயிரம்-நான்கு-நூறு-ஐந்து-பத்து-மூன்று

௨-௲-௪-௱-௫-௰-௩

தற்கால புதிய முறைப்படி, இவ்வெண் ௨௪௫௩ என எழுதப்படுகிறது .

துள்ளுந்தில் தமிழ் எண்

எண்கள்

[தொகு]
  • ௧ = 1
  • ௨ = 2
  • ௩ = 3
  • ௪ = 4
  • ௫ = 5
  • ௬ = 6
  • ௭ = 7
  • ௮ = 8
  • ௯ = 9
  • ௰ = 10
  • ௰௧ = 11
  • ௰௨ = 12
  • ௰௩ = 13
  • ௰௪ = 14
  • ௰௫ = 15
  • ௰௬ = 16
  • ௰௭ = 17
  • ௰௮ = 18
  • ௰௯ = 19
  • ௨௰ = 20
  • ௨௰௧ = 21
  • ௨௰௨ = 22
  • ௨௰௩ = 23
  • ௨௰௪ = 24
  • ௨௰௫ = 25
  • ௨௰௬ = 26
  • ௨௰௭ = 27
  • ௨௰௮ = 28
  • ௨௰௯ = 29
  • ௩௰ = 30
  • ௩௰௧ = 31
  • ௩௰௨ = 32
  • ௩௰௩ = 33
  • ௩௰௪ = 34
  • ௩௰௫ = 35
  • ௩௰௬ = 36
  • ௩௰௭ = 37
  • ௩௰௮ = 38
  • ௩௰௯ = 39
  • ௪௰ = 40
  • ௪௰௧ = 41
  • ௪௰௨ = 42
  • ௪௰௩ = 43
  • ௪௰௪ = 44
  • ௪௰௫ = 45
  • ௪௰௬ = 46
  • ௪௰௭ = 47
  • ௪௰௮ = 48
  • ௪௰௯ = 49
  • ௫௰ = 50
  • ௫௰௧ = 51
  • ௫௰௨ = 52
  • ௫௰௩ = 53
  • ௫௰௪ = 54
  • ௫௰௫ = 55
  • ௫௰௬ = 56
  • ௫௰௭ = 57
  • ௫௰௮ = 58
  • ௫௰௯ = 59
  • ௬௰ = 60

பின்ன வடிவங்கள்

[தொகு]

பின்ன வடிவங்களை குறிக்கவும் தமிழ் குறியீடுகள் இருந்தன. அவை தற்போது வழக்கில் இல்லை.

தமிழ்எண் எழுத்து அச்சுப்பதிவு

[தொகு]

செந்தமிழ் எண்ணுச்சொற்களும் பிற திராவிட எண்ணுச்சொற்களும்

[தொகு]

கீழுள்ள அட்டவணை முதன்மையான தென்னிந்திய/திராவிட மொழிகளை ஒப்பிடுகிறது. இங்கே சொல்வடிவம் என்று சொல்வது வாயாற்சொல்லி எழும் ஒலிநிலைச் சொல்வடிவத்தையே; தமிழ் வரிவடிவத்தைத் தொல்காப்பியத்தின்படி உச்சரித்தால்மட்டுமே இங்கே செந்தமிழ்பற்றிக்கூறுங் கூற்றுப் பொருந்தும் திராவிட மொழிகளில் மிகப் பழைய செவ்வியல் மொழியாகிய தமிழ் மொழியில் உள்ள எண்ணுச்சொற்கள் மற்ற திராவிட மொழிக்குடும்ப எண்ணுச்சொற்களைவிட மூலத்தொல் திராவிடச் சொல்லமைப்புக்களுக்கு நெருக்கமானவை. அதாவது மூலத்திராவிடத்திலிருந்து ஒரே எண்ணுச்சொற்களைப்பெற்றுப் படிப்படியே திராவிடமொழிகள் பிரிந்து அவற்றைப் படிப்படியே பேரளவில் சிதைத்துவிட்டன. ஆனால் செந்தமிழ் எண்ணுச்சொற்களின் பழைய வடிவத்தைப் பெரும்பாலும் சிதையாமற் போற்றியுள்ளது. ஐந்து ஆறு என்பவற்றிற்கானவைமட்டும் சொன்முதல் மெய்யொலியை இழந்துவிட்டன. இன்னொன்று கவநிக்கவேண்டுவதென்னவென்றால் தொல்காப்பியத்தின்படிச் செந்தமிழை உச்சரித்தால்மட்டுமே இந்தக் கூற்றுப் பொருந்தும்

எண் தமிழ் கன்னடம் மலையாளம் துளு தெலுங்கு கோலமி கூர்க் பிராகுயி மூல தமிழ்
1 ஒன்று ஒண்டு ஒண்ணு ஒஞ்சி ஒகட்டி ஒக்கோடு ஒண்ட அசித் *ஒரு(1)
2 இரண்டு எரடு ரண்டு ராடு ரெண்டு இராட் இண்டின் இராட் *இரு(2)
3 மூன்று மூரு மூன்னு மூ(ஞ்)சி மூடு மூண்டின் மூண்ட்(உ) முசித் *முச் (மூ)
4 நாலு, நான்கு நால்கு நாலு நால் nālugu நாலின் நாலுகு சார் (II) *நான் (நால்)
5 ஐந்து ஐது அஞ்சு அய்ண் (ஐந்) அயிது அய்த் 3 பஞ்செ (II) பான்யே (பானே) (II) *சய்ந்
6 ஆறு ஆறு ஆறு ஆஜிi ஆறு ஆர் 3 சொய்யே (II) ஸஸ் (II) *சாறு
7 ஏழு ஏளு ஏளுகு (ஏடு) யேல் ஏடு ஏட்(உ) 3 சத்தே (II) ஹாஃப்த் (II) *ஏளு (ஏழ்)
8 எட்டு எண்டு எட்டு எட்ம எனிமிதி எனுமதி 3 அத்தே (II) ஹஸ்த் (II) *எட்டு
9 ஒன்பது ஒம்பது ஒன்பது ஒர்ம்ப தொம்மிதி தொம்தி 3 நைம்யே (II) நோஹ் (II) *தொல்
10 பத்து ஹத்து பத்து பத்த் பதி பதி 3 தசே (II) தஹ் (II) *பத்(து)

மேலும் தமிழ், பல்லவ எழுத்து ஊடாகவும் அதில் இருந்துப் பின்னர் கவி எழுத்து ஊடாகவும் கேமர் எழுத்து ஊடாகவும் பிற தென்கிழக்கு ஆசிய எழுத்துகளூடாகவும் பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய வரைவன்களை/எண்குறிகளை வடிவமைத்துள்ளது.

தமிழ் இலக்கம் - எண் எழுத்துக்கள்

[தொகு]

தமிழ் இலக்கம் - எண் எழுத்துக்கள்[3]

தமிழ் இலக்கம் பெயர் எண் அளவு
𑿀 முந்திரி 1/320
𑿁 அரைக்காணி 1/160
அரைக்காணி முந்திரி 3/320
𑿂 காணி 1/80
𑿃 கால் வீசம் 1/64
𑿄 அரைமா 1/40
𑿅 அரை வீசம் 1/32
𑿆 முக்காணி 3/80
𑿇 முக்கால் வீசம் 3/64
𑿈 ஒருமா 1/20
𑿉, 𑿊 மாகாணி (வீசம்) 1/16
𑿋 இருமா 1/10
𑿌 அரைக்கால் 1/8
𑿍 மூன்றுமா 3/20
𑿎 மூன்று வீசம் 3/16
𑿏 நாலுமா 1/5
𑿐 கால் 1/4
𑿑, 𑿒 அரை 1/2
𑿓 முக்கால் 3/4
ஒன்று 1
இரண்டு 2
மூன்று 3
நான்கு 4
ஐந்து 5
ஆறு 6
ஏழு 7
எட்டு 8
ஒன்பது 9
பத்து 10
௨௰ இருபது 20
௩௰ முப்பது 30
௪௰ நாற்பது 40
௫௰ ஐம்பது 50
௬௰ அறுபது 60
௭௰ எழுபது 70
௮௰ எண்பது 80
௯௰ தொண்ணூறு 90
நூறு 100
ஆயிரம் 1000
௰௲ பத்தாயிரம் 10,000
௱௲ நூறாயிரம் (இலக்கம்) 100,000
௰௱௲ பத்து நூறாயிரம் (பத்திலக்கம்) 10, 00, 000
௱௱௲ நூறு நூறாயிரம் (கோடி) 1, 00, 00, 000

எண் ஒலிப்பு

[தொகு]
  • ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
எண் அளவு சொல்
1/320 320 இல் ஒரு பங்கு முந்திரி
1/160 160 இல் ஒரு பங்கு அரைக்காணி
3/320 320 இல் மூன்று பங்கு அரைக்காணி முந்திரி
1/80 80 இல் ஒரு பங்கு காணி
1/64 64 இல் ஒரு பங்கு கால் வீசம்
1/40 40 இல் ஒரு பங்கு அரைமா
1/32 32 இல் ஒரு பங்கு அரை வீசம்
3/80 80 இல் மூன்று பங்கு முக்காணி
3/64 64 இல் மூன்று பங்கு முக்கால் வீசம்
1/20 20 ஒரு பங்கு ஒருமா
1/16 16 இல் ஒரு பங்கு மாகாணி (வீசம்)
1/10 10 இல் ஒரு பங்கு இருமா
1/8 8 இல் ஒரு பங்கு அரைக்கால்
3/20 20 இல் மூன்று பங்கு மூன்றுமா
3/16 16 இல் மூன்று பங்கு மூன்று வீசம்
1/5 ஐந்தில் ஒரு பங்கு நாலுமா
1/4 நான்கில் ஒரு பங்கு கால்
1/2 இரண்டில் ஒரு பங்கு அரை
3/4 நான்கில் மூன்று பங்கு முக்கால்
1 ஒன்று ஒன்று
  • எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
எண் ஒலிப்புச் சொல்
1 ஒன்று (ஏகம்)
10 பத்து
100 நூறு
1000 ஆயிரம்(சகசிரம்)
10,000 பத்தாயிரம்(ஆயுதம்)
1,00,000 நூறாயிரம்(இலட்சம் - நியுதம்)
10,00,000 பத்து நூறாயிரம்
1,00,00,000 கோடி
10,00,00,000 அற்புதம்
1,00,00,00,000 நிகற்புதம்
10,00,00,00,000 கும்பம்
1,00,00,00,00,000 கணம்
10,00,00,00,00,000 கற்பம்
1,00,00,00,00,00,000 நிகற்பம்
10,00,00,00,00,00,000 பதுமம்
1,00,00,00,00,00,00,000 சங்கம்
10,00,00,00,00,00,00,000 வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000 அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000 (அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000 பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000 பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000 பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)

மேலும் சில எண் குறிகள்

[தொகு]
  • ௧ = 1
  • ௨ = 2
  • ௩ = 3
  • ௪ = 4
  • ௫ = 5
  • ௬ = 6
  • ௭ = 7
  • ௮ = 8
  • ௯ = 9
  • ௰ = 10
  • ௰௧ = 11
  • ௰௨ = 12
  • ௰௩ = 13
  • ௰௪ = 14
  • ௰௫ = 15
  • ௰௬ = 16
  • ௰௭ = 17
  • ௰௮ = 18
  • ௰௯ = 19
  • ௨௰ = 20
  • ௱ = 100
  • ௱௫௰௬ = 156
  • ௨௱ = 200
  • ௩௱ = 300
  • ௲ = 1000
  • ௲௧ = 1001
  • ௲௪௰ = 1040
  • ௮௲ = 8000
  • ௰௲ = 10,000
  • ௭௰௲ = 70,000
  • ௯௰௲ = 90,000
  • ௱௲ = 100,000 (lakh)
  • ௮௱௲ = 800,000
  • ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
  • ௯௰௱௲ = 9,000,000
  • ௱௱௲ = 10,000,000 (crore)
  • ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
  • ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
  • ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
  • ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
  • ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
  • ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

தமிழ் எண்கள் அட்டவணை 1 முதல் 1000 வரை இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது[4].

மேலும் சில இறங்குமுக எண்கள் [5]

[தொகு]

பதின்ம முறை [6]

[தொகு]
  • 1/5 – நாலுமா
  • 3/20 – மூன்றுமா
  • 1/10 – இருமா
  • 1/20 – ஒருமா

பாதி முறை அல்லது அரைம முறை

[தொகு]
  • 1 – ஒன்று
  • 7/8 - முக்காலலேயரைக்கால் (முக்கால் + அரைக்கால்)
  • 3/4 – முக்கால்
  • 5/8 - அரையேயரைக்கால் (அரை + அரைக்கால்)
  • 1/2 – அரை
  • 3/8 - காலலேயக்கால் (கால் + அரைக்கால்)
  • 1/4 – கால்
  • 1/8 - அரைக்கால்
  • 3/16 – மூன்று வீசம்
  • 1/8 – அரைக்கால்
  • 1/16 – மாகாணி(வீசம்)[7]
  • 3/64 – முக்கால்வீசம்
  • 3/80 – முக்காணி
  • 1/32 – அரைவீசம்
  • 1/40 – அரைமா
  • 1/64 – கால் வீசம்
  • 1/80 – காணி
  • 3/320 – அரைக்காணி முந்திரி
  • 1/160 – அரைக்காணி
  • 1/320 – முந்திரி
  • 1/102400 – கீழ்முந்திரி
  • 1/2150400 – இம்மி
  • 1/23654400 – மும்மி
  • 1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ wikt:nano = 0.000000001
  • 1/1490227200 – குணம்
  • 1/7451136000 – பந்தம்
  • 1/44706816000 – பாகம்
  • 1/312947712000 – விந்தம்
  • 1/5320111104000 – நாகவிந்தம்
  • 1/74481555456000 – சிந்தை
  • 1/489631109120000 – கதிர்முனை
  • 1/9585244364800000 – குரல்வளைப்படி
  • 1/575114661888000000 – வெள்ளம்
  • 1/57511466188800000000 – நுண்மணல்
  • 1/2323824530227200000000 – தேர்த்துகள்

அளவைகள்

[தொகு]

நீட்டலளவு

[தொகு]
  • 10 கோன் – 1 நுண்ணணு
  • 10 நுண்ணணு – 1 அணு
  • 8 அணு – 1 கதிர்த்துகள்
  • 8 கதிர்த்துகள் – 1 துசும்பு
  • 8 துசும்பு – 1 மயிர்நுணி
  • 8 மயிர்நுணி – 1 நுண்மணல்
  • 8 நுண்மணல் – 1 சிறுகடுகு
  • 8 சிறுகடுகு – 1 எள்
  • 8 எள் – 1 நெல்
  • 8 நெல் – 1 விரல்
  • 12 விரல் – 1 சாண்
  • 2 சாண் – 1 முழம்
  • 4 முழம் – 1 பாகம்
  • 6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
  • 4 காதம் – 1 யோசனை

பொன்நிறுத்தல்

[தொகு]
  • 4 நெல் எடை – 1 குன்றிமணி
  • 2 குன்றிமணி – 1 மஞ்சாடி
  • 2 மஞ்சாடி – 1 பணவெடை
  • 5 பணவெடை – 1 கழஞ்சு
  • 8 பணவெடை – 1 வராகனெடை
  • 4 கழஞ்சு – 1 கஃசு
  • 4 கஃசு – 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்

[தொகு]
  • 32 குன்றிமணி – 1 வராகனெடை
  • 10 வராகனெடை – 1 பலம்
  • 40 பலம் – 1 வீசை
  • 6 வீசை – 1 தூலாம்
  • 8 வீசை – 1 மணங்கு
  • 20 மணங்கு – 1 பாரம்

முகத்தல் அளவு

[தொகு]
  • 5 செவிடு – 1 ஆழாக்கு
  • 2 ஆழாக்கு – 1 உழக்கு
  • 2 உழக்கு – 1 உரி
  • 2 உரி – 1 படி
  • 8 படி – 1 மரக்கால்
  • 2 குறுணி – 1 பதக்கு
  • 2 பதக்கு – 1 தூணி

பெய்தல் அளவு

[தொகு]
  • 300 நெல் – 1 செவிடு
  • 5 செவிடு – 1 ஆழாக்கு
  • 2 ஆழாக்கு – 1 உழக்கு
  • 2 உழக்கு – 1 உரி
  • 2 உரி – 1 படி
  • 8 படி – 1 மரக்கால்
  • 2 குறுணி – 1 பதக்கு
  • 2 பதக்கு – 1 தூணி
  • 5 மரக்கால் – 1 பறை
  • 80 பறை – 1 கரிசை
  • 48 96 படி – 1 கலம்
  • 120 படி – 1 பொதி

ஆயிர அடுக்கு முறைமை

[தொகு]

தமிழர் ஆயிர அடுக்கு முறைமையைப் பின்பற்றி எண்களுக்குப் பெயரிட்டு வழங்கிவந்தனர். எண் குறியீட்டில் 84,000,000 யோனி ஆண்டுகள் என்பதனைப் பெரியபுராணம் யோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரத்து அதனுள் என்று குறிப்பிடுவது காண்க.[8] இது ஆங்கில முறையில் 1,000,000,000,000 டிரிலியன், 1,000,000,000 பில்லியன் என எண்ணுவது போன்றதாகும்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://ia601503.us.archive.org/28/items/tamil_zero/tamil_zero.pdf
  2. http://unicode.org/notes/tn21/tamil_numbers.pdf
  3. முனைவர் தமிழப்பன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் அட்டவணை1
  4. "தமிழ் எண்கள் 1 முதல் 1000 வரை".
  5. கீழ்வாய்ச் சிற்றிலக்கம்
  6. decimal fraction method
  7. வீசத்தை மாகாணி என்றும் கூறுவர். - [மா என்பது 1/20] - [காணி என்பது 1/80] - [மா+காணி] = [4/80+1/80=5/80=1/16] = வீசம்
  8. ஏதமில் பலயோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரத்து அதனுள்
    பேதமும் புரந்து அருளும் அக் கருணைப் பிரான் மொழிந்த ஆகம வழி பேணிப்
    போது நீர்மையில் தொழுதனள் போதப் பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்து எய்தி
    மா தவம் புரிந்து அருளுதற்கு அமைந்த வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான் (பெரியபுராணம் 4.5.54)

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_எண்கள்&oldid=3935856" இலிருந்து மீள்விக்கப்பட்டது