உள்ளடக்கத்துக்குச் செல்

பன்புல் தொழில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்புல் தொழில் என்பது பன் புல்லை முதன்மை மூலப் பொருளாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் ஒரு கைத்தொழில் ஆகும்.

பன்

நடைபெறும் இடங்கள்

[தொகு]

இலங்கையில், கிழக்கு மாகாணத்தில் பன்புல் தொழில் ஒரு முக்கிய தொழிலாக உள்ளது. வாழைச்சேனை, நாவற்குடா, தாழங்குடா, குருக்கள்மடம், செட்டிப்பாளையம், களுதாவளை, ஒந்தாச்சி மடம், கல்லாறு, காத்தான்குடி, ஒல்லிக்குளம், காங்கேயனோடை, பாலமுனை, பூனொச்சிமுனை, ஏறாவூர், மீராவோடை, செம்மண் ஓடை, காவத்த முனை உட்பட்ட ஊர்களில் இத் தொழில் மேற்கொள்ளப்படுகின்றது.[1] காலி, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி ஆகிய இலங்கையின் பிற பிரதேசங்களிலும் இத் தொழில் சிறு சிறு அளவில் காணப்படுகிறது.[2]

மூலப் பொருட்கள்

[தொகு]

பன்புல் தொழிற்கு முதன்மை மூலப் பொருள் பன்புல்லே ஆகும். பன்புல் அண்மைக் காலங்களில் கோழிச்சாயம் பயன்படுத்தி சாயம் போடப்படுகிறது. பாரம்பரிய முறையில் பல்வேறு தாவர சாயங்களைப் பயன்படுத்தி சாமயம் போடுவர். சாயமும், நீரும் இதற்குத் தேவை.

கருவிகள்

[தொகு]

உற்பத்திப் பொருட்கள்

[தொகு]
பன் கூடை

பன்புல்லின் முதன்மை உற்பத்திப் பொருள் பல வடிவமைப்புக்கள், அளவுகளில், பயன்பாட்டுக்காக செய்யப்படும் பன்புல் பாய்கள் ஆகும். அவை ஐந்து வகைப்படும். அவையானவை:

  • இழைப்புப்/பின்னல் பாய்
  • பிணிப் பாய்
  • காதுப் பாய்,
  • கரைப் பாய்
  • கல்யாணப் பாய்

பாய்களைத் தவிர பின்வரும் உற்பத்திப் பொருட்களும் பன்புல்லை மூலமாகக் கொண்டு செய்யப்படுகின்றன.

  • அச்சுத் தொப்பி
  • சிறு பெட்டி
  • கூடை
  • தோட்டப் பை
  • அகப்பை சொருகி
  • காலணி
  • காசுப்பை

செயலாக்கம்

[தொகு]

பயிரிடலும் வெட்டலும்

[தொகு]

நெற் செய்கை போன்று பன் புல் பயிரிடப்படுகிறது. பன்புல் கிழங்கில் இருந்து வளரும். கிழங்கில் இருந்து முதலில் வளரும் போது 6 மாதம் அளவில் வெட்டப்படக் கூடியது. அதன் பின் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறையும் வெட்டப்படக் கூடியது. வெட்டியபின், குட்டிகளில் இருந்து பன் புல் மீண்டும் வளர்ந்துவிடும்.

பன்புல் 6 அடி வரை வளரக் கூடியது.

காயவிடல்

[தொகு]

வெட்டப்பட்ட பின்பு பன்புல் 3 - 4 நாட்கள் வெய்யிலில் காயப்போடப்பட்டு கட்டுக்களாக கட்டப்படுகின்றது.

தரம் பிரித்தல்

[தொகு]

பன்புல்லில் அகலம், நீளம், நிறம் கொண்டு தரம் பிரிக்கப்படுகிறது.

சாயம் போடுதல்

[தொகு]

பன்புல்லின் நிறம் குன்றிவை வேறு நிறத்துக்கு சாயம்போட தெரிவு செய்யப்படுகின்றன. அண்மைக் காலங்களில் கோழிச்சாயத்தைப் பயன்படுத்தி பச்சை, ஊதா போன்ற நிறங்களில் சாயம்போடப்படுகிறது. சாயம்போட, தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் பன்புல்லை இட்டு, எடுத்து ஒரு நாள் வெய்யிலில் காயப் போடுவர்.

பதப்படுத்தல்

[தொகு]

இவ்வாறு சாயம் போடப்பட்ட போடப்படாத பன்புற்களை பருத்தி மனையினைப் பயன்படுத்தி பதப்படுத்துவார்கள்.

இழைத்தல்/பின்னல்

[தொகு]

இழைத்தல் மற்றும் பின்னல் முறையின் ஊடாகவே பாய், பை, தொப்பி உட்பட்ட பல உற்பத்திப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. சிலவற்றைப் பின்னும் போது அச்சுப் பயன்படுத்தியும் அதன் வடிவை அமைக்கிறார்கள். இழைத்தல் மற்றும் பின்னல் தோரணங்கள் பல வகை உண்டு. உயர்ந்த திறன் கொண்ட கலைஞர்கள் மிகவும் கலைவண்ணம் மிக்க பொருட்களை உருவாக்க வல்லவர்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. சித்திரக் கலை - ஆசிரியர் வழிகாட்டி - தரம் 7 (PDF). இலங்கை: அழகியற் கல்வித் துறை - தேசிய கல்வி நிறுவகம். 2016.
  2. சித்திரக் கலை - ஆசிரியர் வழிகாட்டி - தரம் 7 (PDF). இலங்கை: அழகியற் கல்வித் துறை - தேசிய கல்வி நிறுவகம். 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்புல்_தொழில்&oldid=2573187" இலிருந்து மீள்விக்கப்பட்டது