பயனர் பேச்சு:Nan
Delete page
வணக்கம். கோகுல் பிரசாத் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட பக்கத்திற்கு நான் பங்களித்திருந்தேன். இன்று அது நீக்கப்பட்டதாக தெரிகிறது. ஏன் என்று அறிந்துகொள்ளலாமா. அவர் தற்போது தமிழில் தொடர்ச்சியாக திரைப்பட விமர்சனம் மற்றும் திறனாய்வு செய்து வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் நடத்திவரும் விஷ்ணுபுரம் விருது விழாவில் சிறப்பு விருந்தினர். பலரால் எதிர்பார்க்கப்பட்ட சினிமா கட்டுரை வெளியிடப்பட போகிறது. மேலும் பார்க்க https://www.jeyamohan.in/159619/ மீண்டும் அந்த பக்கத்தை restore செய்ய வேண்டும். நன்றி--−முன்நிற்கும் கருத்து MalVij (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- வணக்கம். 1) இந்தக் கட்டுரை விளம்பரம்போல் இருந்தது; 2) குறிப்பிடத்தக்கமை (விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை) இல்லாமல் இருந்தது. திரைப்பட விமர்சனம் மற்றும் திறனாய்வு செய்வதும், ஒரு எழுத்தாளர் நடத்தும் விழாவில் சிறப்பு விருந்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கமைக்குள் வராது. நீங்கள் இதை முக்கியக் கட்டுரையாக உருவாக்குவதாக உறுதியளித்தால் கட்டுரையை மீள்விக்கிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 13:47, 22 திசம்பர் 2021 (UTC)
- நேற்று நீங்கள் நீக்கிய திருசெந்தாழை மற்றும் சுஷில்குமார் பக்கங்களை மீள்வியுங்கள். நான் அவற்றை முக்கிய கட்டுரைகளாக உருவாக்குகிறேன். நன்றி CXPathi (பேச்சு) 14:00, 22 திசம்பர் 2021 (UTC)
- ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 14:03, 22 திசம்பர் 2021 (UTC)
நன்றி ஐயா! CXPathi (பேச்சு) 14:11, 22 திசம்பர் 2021 (UTC)
கோகுல் பிரசாத் பக்கத்தை மீள்வியுங்கள். அதை முக்கிய கட்டுரையாக உருவாக்குகிறேன். உதவிக்கு நன்றி.--−முன்நிற்கும் கருத்து MalVij (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 08:34, 24 திசம்பர் 2021 (UTC)
How we will see unregistered users
Hi!
You get this message because you are an admin on a Wikimedia wiki.
When someone edits a Wikimedia wiki without being logged in today, we show their IP address. As you may already know, we will not be able to do this in the future. This is a decision by the Wikimedia Foundation Legal department, because norms and regulations for privacy online have changed.
Instead of the IP we will show a masked identity. You as an admin will still be able to access the IP. There will also be a new user right for those who need to see the full IPs of unregistered users to fight vandalism, harassment and spam without being admins. Patrollers will also see part of the IP even without this user right. We are also working on better tools to help.
If you have not seen it before, you can read more on Meta. If you want to make sure you don’t miss technical changes on the Wikimedia wikis, you can subscribe to the weekly technical newsletter.
We have two suggested ways this identity could work. We would appreciate your feedback on which way you think would work best for you and your wiki, now and in the future. You can let us know on the talk page. You can write in your language. The suggestions were posted in October and we will decide after 17 January.
Thank you. /Johan (WMF)
18:19, 4 சனவரி 2022 (UTC)
சசிகலா
சார் வணக்கம்! நான் திருமதி வி கே சசிகலா அவர்களைப்பற்றிய பக்கத்தில் ஒரு சில கூடுதல் தகவல்களை சேர்க்க விரும்புகிறேன்.அதனால் அதை தொகுக்கும் உரிமையை வழங்கும் வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன் அன்புடன்... Snthilakammarist (பேச்சு) 16:50, 28 சனவரி 2022 (UTC)
- ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 17:12, 28 சனவரி 2022 (UTC)
நன்றி சார் தற்போது தங்கள் இந்த பக்கத்தை பூட்டலாம் Snthilakammarist (பேச்சு) 19:47, 28 சனவரி 2022
வணக்கம்
நேபாளத்தில் சுற்றுலா கட்டுரையில் Pages with graphs என்ற பகுப்பு வருகிறது. நீக்க உதவவும். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 09:45, 4 மார்ச் 2022 (UTC)
- ஆயிற்று. வணக்கம். மறைக்கப்பட்ட பகுப்புகளுக்குள் சேர்த்துள்ளேன்.--நந்தகுமார் (பேச்சு) 09:56, 4 மார்ச் 2022 (UTC)
கார்தமிழ் பதில்
வணக்கம் நந்த குமார். பிரச்சினை முடிவுக்கு கொண்டு வர நீச்சல்காரன் கூறியபடி வருத்தம் தெரிவித்தேன்.
நீங்கள் உட்பட பலரும் என் கேள்விக்கு இதுவரை பதில் கூறாதது ஏன் என்று இன்னும் கூறவில்லை. என் கேள்வி இது தான். 1.ஏன் எனது கட்டுரை ஒரே நாளில் நீக்கப் பட்டது. ?
2. விக்கி கட்டுரை பகுதிக்கு புதியவரான நான் ஒரு கட்டுரை எழுதியதும் வழிகாட்ட எவரும் வராமல் நீக்க மட்டும் வருகிறார்கள் ஏன்?
3.நான் என்ன பிழை செய்தேன் என்று தெரிந்தால் தானே அடுத்தக் கட்டுரையில் அந்த தவறுகளைக் களைந்து நல்ல கட்டுரை எழுத முடியும்.?
4.ஆரம்பம் முதலே என்னை நீக்குவது குறித்து அதிகம் பேசி வரக் காரணம் என்ன?
6. வருத்தம் தெரிவித்து பிரச்சினை முடிவுக்கு கொண்டு வர நான் நினைக்கிறேன். ஆனால் என்னை அந்நியன் மனநிலை என்று ஆண்டன் பேசியது பற்றி கவலைப்படாமல் அவரை எதுவும் சொல்லாமல் இருப்பது சரியா?
ஆன்ரன் எப்படி என் மீது தனிமனித தாக்குதல் அந்நியன் என்று தொடுக்கலாம்.? அதற்கு அவரை நிரந்தரமாக நீக்குவீர்களா? அண்ரன் மீது மேல் நடவடிக்கை எடுக்க நான் செல்ல வேண்டுமா? இப்படியே பிரச்சினை வளர்க்கலாமா இல்லை முடிக்கலாமா என்பதை உங்கள் அறிவார்ந்த சிந்தனைக்கு விட்டு விடுகிறேன். கார்தமிழ் (பேச்சு) 08:59, 5 மார்ச் 2022 (UTC)
- @கார்தமிழ்: உங்கள் இரண்டு கட்டுரைகளும் ஏன் நீக்கப்பட்டன என இங்கு விளக்கம் தந்திருந்தேனே. பார்க்கவில்லையா? புதியவர்கள் எல்லோரும் ஏன் உடனேயே புதுக் கட்டுரைகளைத் தொடங்குகிறீர்கள்? தமிழ் விக்கியில் உள்ள 144,000 கட்டுரைகள் எவையுமே முழுமையானவை அல்ல. முதலில் அவற்றில் இருந்து உங்களுக்கு விருப்பமான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து மேம்படுத்துங்கள். அப்போது விக்கிப்பீடியாவில் எவ்வாறு கட்டுரை எழுத வேண்டும் எனத் தெரிந்து கொள்வீர்கள். அதை விடுத்து நிர்வாகிகள் மீது குற்றம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அவர்கள் இல்லை என்றால் தமிழ் விக்கிப்பீடியா குப்பையாகி விடும் என்பதை உணருங்கள். விக்கிப்பீடியா குப்பை கொட்டும் வலைப்பதிவு அல்ல.--Kanags \உரையாடுக 09:43, 5 மார்ச் 2022 (UTC)
- @கார்தமிழ்: வணக்கம் கார்தமிழ். வன்சொற்களை எழுதியது நீங்கள்தானே. உங்கள் மேல் எந்த ஒரு தீய எண்ணமும் எங்களுக்கு இல்லை. உண்மையில், உங்களைப் பற்றி முன்பு நான் அறிந்ததேயில்லை. உங்களின் வன்சொற்கள் பயன்பாடே உங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கான ஆரம்பம். சாதாரணமாக, ஒரு பயனர் நீங்கள் பயன்படுத்திய வன்சொற்களைப் பயன்படுத்தினால், உடனே அப்பயனரை முடிவிலியாகத் தடை செய்வதுதான் வழக்கம். முன்பும் சில பயனர்களை நானும் அவ்விதம் தடை செய்துள்ளேன். நீங்கள் தமிழாசிரியர் என்று குறிப்பிட்டமையால் (தமிழாசிரியர்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ள நான், உங்களை பிற பயனர்கள் அறிந்துள்ளது, நீங்கள் தமிழ் வளர்க்கும் ஒரு மையத்துடன் இணைந்து செயற்படுவது, நம் விக்கியில் பங்களிக்க மற்றவர்களை ஊக்குவிப்பது எல்லாம் பிறகு நான் அறிந்து கொண்டவை என்றாலும்), நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய வன்சொற்களுக்கு மன்னிப்புக்கோர உங்களுக்கு ஒரு வாரம் கால அவகாசம் அளித்திருந்தேன். இதை மேலும் இரண்டு நிர்வாகிகளும் ஆமோதிப்பதை விக்கி உரையாடல்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். விக்கிப்பீடியாவில் நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற அளவு, நேரம் கிடைக்கும்போது, பங்களிக்க முயலுகிறோம். இப்படி தன்னார்வலர்களாகப் பங்களிக்கும்போது, குறைந்த அளவு தனிமனித தாக்குதல்கள் இல்லாமல் இருப்பது தேவையல்லவா? நீங்கள் உணர்வுவயப்பட்டு, தெரியாமல் செய்துவிட்டதால், மன்னிப்பு கேட்பது தவறாகுமா?--நந்தகுமார் (பேச்சு) 10:11, 5 மார்ச் 2022 (UTC)
மீண்டும் தொடர்வதா பிரச்சினை
வருத்தம் தெரிவித்த பிறகும் ஏன் மீண்டும் இது குறித்து பேச வேண்டும் ஐயா. நான் தான் வருத்தம் தெரிவித்து விட்டேனே!
- தவறே செய்யாத போது மன்னிப்பு எதற்கு? வருத்தம் தெரிவித்தால் முடிவுக்கு வரும் என்று தெரிவித்தேன். நீக்குவது தான் உங்கள் விருப்பமா? என் கேள்விகளுக்கு பதில் கூற ஏன் ஆண்டன் அச்சப்படுகிறாரோ என தெரியவில்லை. பதில் கூறுவது ஒரு குற்றமாகுமா? தனது பக்கத்தில் மட்டும் அநாகரிமாக ஆண்டன் கூறியுள்ளதைப் பாருங்கள். இதற்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?
- ஆண்டன் கீழ்க்கண்டவாறு தன் பயனர் பக்க முகப்பில் கூறுகிறார்:- //கோழைத்தனமான வன்சொல்லாளிகளுக்கு!
- உமது அதிகபட்ச தாக்குதல், கைக்கெட்டாத தூரத்தில் இருந்து கொண்டு செய்யும் கோழைத்தனத்தின் அடையாளமான வன்சொல் மட்டுமே! அதனை துடைப்பத்தால் நீக்கிவிட்டு முன்னேறிக் கொண்டிருப்போன். முகவரியற்றவர்களின் ஈனமான தாக்குதல் என்னைத் தடுத்துவிடப்போவதில்லை.// என்று ஆண்டன் தெரிவித்துள்ளார்.
- (பக்க இணைப்பு: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:AntanO#%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.)
- இதன் மீது நடவடிக்கை தேவை. ஒரு நிர்வாகி இப்படி பதியலாமா? கார்தமிழ் (பேச்சு) 10:27, 5 மார்ச் 2022 (UTC)
- @கார்தமிழ்:, மன்னிக்கவும். நீங்கள், வன்சொற்கள் எழுதியிருப்பது உங்களுக்குத் தவறாகத் தெரியவில்லையா? துப்புரவு செய்யும் நிருவாகிகள் பலவிதங்களில் சொற்களால் தாக்கப்படுவது, அவர்கள் குறித்து விக்கிக்கு வெளியில் கருத்திடுவது, பேசுவது நடந்துகொண்டுதான் உள்ளது. ஆனால், விக்கியில் என்ன நடக்கிறது என்பதுதான் முக்கியமாகிறது. ஆன்டன் எழுதியிருப்பது உங்கள் வன்சொற்கள் பயன்பாட்டிற்கான எதிர்வினையாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது. உங்களை விக்கியிலிருந்து நீக்குவதால் எங்களுக்கு என்ன இலாபம்? நம் தமிழ் விக்கிக்கு இழப்பேயாகும். என்றாலும், உங்களின் தனிமனிதத் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல. உங்களை மன்னிப்பு கேட்க கூறுவதால் நாங்கள் எதையும் சாதித்து விட்டோமா, என்ன? இல்லை. ஒரு குழுமமாகப் பணியாற்றும்போது, தனிமனிதத் தாக்குதல்கள் நடக்கும்போது அமைதியாக இருப்பது கடினமான ஒன்று. அவை கடுமையாகத் தடுக்கப்படவேண்டிய ஒன்றாகும்.--நந்தகுமார் (பேச்சு) 10:45, 5 மார்ச் 2022 (UTC)
- ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சிய வடிவில் இல்லையென்றால் உடனடியாக நீக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். நீங்கள் எழுதியக் கட்டுரையை நான் பார்க்கவில்லை. இங்கு ஒய்வு நேரத்தில் பலரும் பங்களிப்பதால், ஒரு பயனரின் கேள்விகளுக்கு தாமதமாகத்தான் பதில்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, பொறுமை அவசியமாகிறது. உதாரணமாக, முதலில் மணல்தொட்டியில் எழுதி கட்டுரை தரமாக வந்தபின் பொதுவெளிக்கு நகர்த்தியிருந்தால் எந்த இடையூறும் வந்திருக்காது.--நந்தகுமார் (பேச்சு) 10:11, 5 மார்ச் 2022 (UTC)
ஆம் நந்த குமார் ஐயா. அதற்குத் தான் வருத்தம் தெரிவித்துள்ளேன். மீண்டும் ஏன் இப்பிரச்சினை பேசப் படுகின்றது. ஆக என்னை நீக்குவது ஒன்றே நோக்கமாக கொண்டு மீண்டும் மீண்டும் இப்பிரச்சினை குறித்து பேசி என்னை சிக்க வைக்க முயற்சி நடக்கிறதோ என்று நான் சந்தேகப் படலாமா? கார்தமிழ் (பேச்சு) 10:49, 5 மார்ச் 2022 (UTC)
வருத்தம் தெரிவித்ததோடு பிரச்சினை முடிவுக்கு வந்திருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் இதையே பேசிக் கொண்டு எத்தனை பேர் நேரத்தை வீணாக்கப் போகிறோம். கார்தமிழ் (பேச்சு) 10:51, 5 மார்ச் 2022 (UTC)
- @கார்தமிழ்:, தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். உங்களை நம் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கி ஆகப்போவது என்ன? இழப்பேயன்றி இலாபம் அல்ல. நீங்கள் ஏன் உங்கள் தவறை புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்? நீங்கள் பொத்தாம்பொதுவில் வருத்தம் தெரிவித்திருப்பது இச்சூழலுக்கு சரியில்லை என்பதை ஏன் நீங்கள் உணர மறுக்கிறீர்கள்? நேரடியாக நீங்கள் ஆன்டனிடம், மன்னிக்கவும், உணர்ச்சிவசப்பட்டு தவறிழைத்துவிட்டேன். இனி, இவ்விதம் வன்சொற்களைப் பயன்படுத்தமாட்டேன், எனக்கூறுவது தவறு என்று கருதுகிறீர்களா? தயவுசெய்து நீங்கள் இவ்விதம் மன்னிப்பு கேட்பதால் உங்களின்மேல் மதிப்பு கூடுமே அல்லாது குறையாது. உங்களை இங்கிருந்து நீக்க வேண்டும் என யாரும் முயற்சி செய்யவில்லை. இப்படி நீங்கள் எண்ணவேண்டிய அவசியமே இல்லை.--நந்தகுமார் (பேச்சு) 11:01, 5 மார்ச் 2022 (UTC)
மன்னிக்கவும் நந்த குமார் ஐயா. நான் மன்னிப்பு கேட்பதால் மட்டும் தான் சமாதானம் ஆவாரா கார்தமிழ் (பேச்சு) 17:32, 5 மார்ச் 2022 (UTC)
- @கார்தமிழ்:, வணக்கம். ஆன்டன் நீண்டகால பயனராகவும், நிருவாகியாகவும் உள்ளார். என்றாலும், நான் அவருடன் தனிப்பட்ட முறையில் எந்த தொடர்பிலும் இல்லை. எனவே, அவர் இதை எப்படி எடுத்துக்கொள்வார் என்பதை என்னால் கணிக்க இயலாது. நீங்கள் முதல்படியாக, உங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டால், உங்கள் கணக்கின் மேல் தடை விதிக்கப்போவதில்லை. பிறகு, காலப்போக்கில் உங்கள் இருவரின் தொடர்பாடல்கள் சரியான திசையில் பயணிக்கலாம் அல்லது சரியில்லாமல் போகலாம். அது உங்களுக்கும், அவருக்கும் உள்ள விக்கிபீடியா அளவிலான தொடர்பு பற்றியது. நான் இங்கு குறிப்பிட விழைவது, குழுமமாக சேர்ந்து தன்னார்வலர்களாகப் பங்களிக்கும்போது ஏற்பட்டப் பிணக்கைக் (தனிமனித தாக்குதல்கள்) குறித்ததேயன்றி வேறு எதுவுமில்லை.--நந்தகுமார் (பேச்சு) 18:08, 5 மார்ச் 2022 (UTC)
- மன்னிப்பு கேட்க நான் தயங்க மாட்டேன். ஆனால் ஆண்டன் செயல் பிரச்சினையை முடிக்கும் விதமாக இல்லை. நேற்று (06.03.2022) என்னை வஞ்சிக்கும் விதமாக நான் கடந்த பரிசோதனையாக உள்ளீடு செய்த என் கவிதை நூலை ( நிலவுக்குக் கீழே ஆகாயம் = நூல் பெயர்) நீக்கியுள்ளார். இது அவரது எத்தகைய குணநலத்தைக் காட்டுகிறது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். எனவே பிரச்சினையை வளர்க்க விரும்பும் ஒருவருக்கு மன்னிப்பு என்றால் என்னவென்றே தெரியாது என நினைக்கிறேன். அவரது தொடர் செயல்கள் பலவும் உற்று நோக்கினால் அவரது மேட்டிமை செயல் தோன்றக் காணலாம். எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; எனவே பக்குவப்படாத ஒருவரிடம் எதை கேட்பதும் வீண் தான். அவருக்காக இல்லாவிட்டாலும் மற்ற இணையச் ச்மூத்தினரை மதிக்க வேண்டியே நான் பதிலுரைக்கிறேன். உங்கள் அனைவரையும் நான் மதிக்கும் முகமாகவே பதில் உரைக்கிறேன். கார்தமிழ் (பேச்சு) 09:35, 7 மார்ச் 2022 (UTC)
- @கார்தமிழ்:, வணக்கம். ஆன்டன் நீண்டகால பயனராகவும், நிருவாகியாகவும் உள்ளார். என்றாலும், நான் அவருடன் தனிப்பட்ட முறையில் எந்த தொடர்பிலும் இல்லை. எனவே, அவர் இதை எப்படி எடுத்துக்கொள்வார் என்பதை என்னால் கணிக்க இயலாது. நீங்கள் முதல்படியாக, உங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டால், உங்கள் கணக்கின் மேல் தடை விதிக்கப்போவதில்லை. பிறகு, காலப்போக்கில் உங்கள் இருவரின் தொடர்பாடல்கள் சரியான திசையில் பயணிக்கலாம் அல்லது சரியில்லாமல் போகலாம். அது உங்களுக்கும், அவருக்கும் உள்ள விக்கிபீடியா அளவிலான தொடர்பு பற்றியது. நான் இங்கு குறிப்பிட விழைவது, குழுமமாக சேர்ந்து தன்னார்வலர்களாகப் பங்களிக்கும்போது ஏற்பட்டப் பிணக்கைக் (தனிமனித தாக்குதல்கள்) குறித்ததேயன்றி வேறு எதுவுமில்லை.--நந்தகுமார் (பேச்சு) 18:08, 5 மார்ச் 2022 (UTC)
தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு
வணக்கம்!
ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!
- விழா ஏற்பாட்டுக் குழு
விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு
வணக்கம்!
செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.
இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு
வணக்கம்!
செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
Dear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு
WikiConference India 2023: Help us organize!
Dear Wikimedian,
You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.
If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (பேச்சு) 15:21, 18 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
Dear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Core organizing team.
WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022
Dear Wikimedian,
As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.
- [WCI 2023] Open Community Call
- Date: 18 December 2022
- Time: 1900-2000 [7 pm to 8 pm] (IST)
- Google Link: https://meet.google.com/wpm-ofpx-vei
Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 08:11, 18 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Organizing team
எனது எண்ணம்
வணக்கம் ஐயா. நிர்வாக அணுக்கத்தை ஏற்க அழைப்பு விடுவது என்பது அவரவரின் விருப்பம், உரிமை. ஆனால், தமிழ் விக்கியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினைத் தராதவர்களையும் நீங்கள் அழைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. நீங்கள் அழைக்கும் சிலர், எவ்வகையான விக்கிச் சமூக உரையாடல்களிலும், முன்னெடுப்புகளிலும் சிறிதும் பங்களிப்பதில்லை. மேலும் பங்களிப்பிலும் குறிப்பிடத்தக்க அளவில் செய்யவில்லை. பேச்சுப் பக்கங்களில் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்கப்படும் - ஆலோசனைகள், உதவிகள் - இவற்றிற்குக் கூட பதிலளிக்காதவர்களை நிர்வாகப் பொறுப்பேற்க அழைக்கிறீர்கள்; அவர்களும் ஒப்புதல் தருகிறார்கள். அனைவரின் பங்களிப்பையும் நாம் மதிக்கிறோம். ஆனால், அதே நேரத்தில்... ஒரு பயனராகக் கூட பதில்கள் தராத, நிர்வாகி எனும் பொறுப்பிற்குரிய பணிகள் எதையும் முன்னெடுத்துச் செய்யாதவர்களை நாம் எப்படி தேர்ந்தெடுத்து அந்தப் பொறுப்பைத் தர இயலும்?
தமிழ் விக்கிப்பீடியாவின் நன்மைக்காக எனது கருத்துகளை இங்கு பதிவுசெய்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:06, 7 ஏப்ரல் 2023 (UTC)
- @வணக்கம்,(மா. செல்வசிவகுருநாதன்), சிவகுருநாதன், எந்த பயனர் என்பதைக் குறிப்பிடமுடியுமா? அவர்கள் இத்தகு பணிகளில் ஈடுபடவில்லை என்றால் தாமாகவே விலகிவிடுவார்கள் அல்லது தகுந்த காரணங்களைக் காட்டி விலக்கிவிடுவேன். இது ஒரு ஜனநாயக முறையென்றே கருதுகிறேன். அவர்களின் பங்களிப்பைப் (எத்தனை முறை கட்டுரைகளை எழுதினார்கள், என்ன அவர்களின் புலமை குறித்து அறிந்த பிறகே அவர்களை அழைத்தேன். நீங்கள் அஅ அவர்களைக் குறிப்பிடுவதாகக் கொண்டால், அவரின் பேச்சுப் பக்கத்தினை காணவும். முதலில் பார்வதிஸ்ரீ மற்றும் பிற நிர்வாகிகள் அவருடைய எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுதியுள்ளதைப் பாருங்கள். இதைக் கண்டபிறகே, அவரை அழைத்தேன். சிலர் சில வேலைகளைக் கொடுத்தபின்பே, அதில் ஆர்வம் காட்டுவார்கள். என்னைப்போல. இல்லையென்றால் நாங்கள் பாட்டிற்கு எங்களுக்குத் தெரிந்ததை செய்து வருவோம், என்ற அடைப்படையில் என்னை உதாரணமாகக் கொண்டே அவரை அழைத்தேன். என்றாலும், அவர் சரியாக இத்தகு பணிகளில் ஈடுபடாதவர் என்றால், பிற பயனர்கள் வாக்களிக்க மாட்டார்கள். அவரும் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வார். ஆகவே எதுவும் எனக்கு தவறாகத்தெரியவில்லை. இல்லையென்றால், சில நபர்களை நாம் வலிந்து திணித்தது போன்ற நிலை பிறருக்குத் தோன்றவே செய்யும். சனநாயக முறைப்படி இது சரியென்றே எண்ணுகிறேன். நீங்கள் இதைக் குறித்து கேள்வி எழுப்பியதற்காக மிக்க மகிழ்வடைகிறேன். நன்றி. நாம் அனைவரும் சேர்ந்தே நம் விக்கியை உயர்த்துவோம். எனக்கும் சரி உங்களுக்கும் சரி வேறு உள்நோக்கங்கள் இல்லை என்பதை நாம் அறிவோம், அல்லவா? அன்புடன் என்றும்...--நந்தகுமார் (பேச்சு) 16:22, 7 ஏப்ரல் 2023 (UTC)
வணக்கம் ஐயா. நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி, அனைவரின் பங்களிப்பையும் நான் மதிக்கிறேன். ஆனால், விக்கியில் நிர்வாகப் பொறுப்பு என்பது தனிப்பட்டவர்களின் அறிவு, புலமை, கல்வித் தகுதி, அதிக எண்ணிக்கையில் கட்டுரைகள் / கட்டுரைகளில் தொகுப்புகள் என்ற அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. மாறாக, விக்கியை வளர்த்தெடுப்பதிலும், நிலைபெறச் செய்தலிலும் ஒருவரின் பங்கு அடிப்படையில்தானே நிர்வாகப் பொறுப்பு வழங்கப்படுகிறது. புதிய பயனர்களை வழிநடத்துதல், மற்ற பயனர்களுக்கு உதவுதல், கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் உரையாடி தீர்வுகளுக்கு உதவுதல், குமுகாயமாக இணைந்து எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் பங்கெடுத்தல், ஆலோசனைகள் வழங்குதல், பரிந்துரைத்தல் (இவை குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள்) ஆகியவை நிர்வாகப் பணிக்கு தேவை என்பது தெளிவான கருத்தாகும். மக்களாட்சியில் வெளிப்படையாக இருப்பதற்கு எனக்கு தயக்கமில்லை! அரிஅரவேலன், இராமானுஜம் இளங்கோ, எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரையே நான் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தேன். அரிஅரவேலன் - அவரின் பெயரைக் குறிப்பிட்டு, கருத்து / உதவி கேட்டபோதும் பதிலளிக்காமல் இருந்திருப்பதைப் பார்த்துள்ளேன். இராமானுஜம் இளங்கோ - அவரின் பங்களிப்பை மட்டும் செய்பவர். எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி - அவரின் பங்களிப்பை மட்டும் செய்பவர். (உடல்நலன் கருதி ஒருவர் மறுத்துவிட்டார்.)
மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுத்தல் என்பது இங்கு இருந்தாலும், நியமனத்திலும் நியாயம் இருக்கவேண்டும் எனக் கருதுகிறேன். ஏனெனில் நல்லெண்ணம் அடிப்படையில்கூட ஒருவர் தேர்வாகிவிட இயலும். ஏனெனில் தமிழ் குமுகாயத்தின் மாண்புகளில் இதுவும் ஒன்று! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:23, 9 ஏப்ரல் 2023 (UTC)
- @வணக்கம் (மா. செல்வசிவகுருநாதன்), சிவகுருநாதன். உங்கள் கருத்துகள் எனக்கு புரிகின்றன. ஒரு உதாரணத்திற்கு, நீங்கள் அரிஅரவேலனின் பேச்சுப் பக்கத்திற்கு சென்று ஏன் அவர் பங்களிப்பதையே நிறுத்திவிட்டார் என்பதை படித்தீர்கள் என்றால், ஏன் அவர் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்பது உங்களுக்கே தெளிவடையும். அன்புடன் என்றும்.--நந்தகுமார் (பேச்சு) 22:37, 9 ஏப்ரல் 2023 (UTC)
இனிய காலை வணக்கம் ஐயா. அரிஅரவேலன் அவர்களின் நிர்வாகித் தேர்தல் நியமனத்திற்கான பகுதியில் 2 கேள்விகளை அவருக்கு வைத்துள்ளேன். அவரின் பதிலைப் படித்துவிட்டு, மேற்கொண்டு இங்கு பதிலுரைத் தருகிறேன். அன்புடன், --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:13, 10 ஏப்ரல் 2023 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 05:37, 10 ஏப்ரல் 2023 (UTC)
இனிய காலை வணக்கம் ஐயா.
அரிஅரவேலன் அவர்களின் பதில்களைப் படித்துவிட்டு, என்னுடைய கருத்துகளை அங்கு பதிவு செய்துள்ளேன். இறுதியாக, எனது எதிர்ப்பு வாக்கினையே பதிவு செய்ய இயன்றது. இந்த எதிர்ப்பு வாக்கு என்பது, அரிஅரவேலன் என்பவருக்கு எதிரானது அன்று; நிர்வாகப் பொறுப்பினை ஏற்பதற்கான தகுதிகள் இப்போது அவரிடம் இல்லை என்பதால் எதிர்ப்பு வாக்கினை பதியவேண்டிய நிலை.
தமிழ் விக்கிப்பீடியாவின் நன்மைக்காகவே நாம் அனைவரும் செயலாற்றுகிறோம். எனினும் - நான் சற்றுக் கடுமையாக எழுதியிருந்தாலோ, செயல்பட்டிருந்தாலோ என்னை மன்னிக்கவும். உங்கள் மீதும் அனைத்துப் பயனர்கள் மீதும் எப்போதும் உயர்ந்த மதிப்பும், மரியாதையும், நல்லெண்ணமும் கொண்டுள்ளேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:58, 13 ஏப்ரல் 2023 (UTC)
செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு
வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G
இறந்தும் இறவாக் கொடை கட்டுரை நீக்கம் குறித்து
இறந்தும் இறவாக் கொடை என்ற தலைப்பில் நான் நேற்று ஒரு கட்டுரை பதிவிட்டு இருந்தேன். தாங்கள் அதை நீக்கி உள்ளதாகத் தெரிய வருகிறேன். காரணத்தை அறிந்து கொள்ளலாமா? - மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 23:30, 22 மே 2023 (UTC)
- @ மு. தாஹா இப்ராஹிம் புஹாரி, வணக்கம். நீங்கள் எழுதிய இந்தக் கட்டுரையை வலைப்பதிவினைப் போல் எழுதியுள்ளீர்கள். கலைக்களஞ்சிய நடையில் இல்லை. எனவே, நீக்கியிருந்தேன். நீங்கள் கலைக்களஞ்சியக் கட்டுரையாக மாற்றுவதாக உறுதியளித்தால், கட்டுரையை மீள்வித்து தருகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 06:07, 23 மே 2023 (UTC)
- ஐயா,
- வலைப்பதிவுக்கான பதிவு எவ்வாறு இருக்க வேண்டும் என ஒரு கட்டுரை உதாரணத்திற்குத் தரப்பட்டால், இன் ஷா அல்லாஹ், இதையும் அவ்வாறு மாற்ற முயல்கிறேன். சற்று நேரம் பிடிக்கும் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். TI Buhari (பேச்சு) 23:18, 23 மே 2023 (UTC)
- @ மு. தாஹா இப்ராஹிம் புஹாரி, வணக்கம். நீங்கள் என் பதிவை தவறாகப் புரிந்து கொண்டீர்கள் எனத் தெரிகிறது. இங்கு கட்டுரைகள் வலைப்பதிவினைப்போல் இருக்கக்கூடாது. கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட வேண்டும். தற்பொழுது நீங்கள் எழுதியுள்ளக் கட்டுரை வலைப்பதிவைப்போல் உள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 07:00, 24 மே 2023 (UTC)
தமிழர் சிறுபான்மையினவியல்
வணக்கம், நீங்கள் தமிழர் சிறுபான்மையினவியல் பேச்சுப்பக்கத்தில் பயனர் இணைப்பு அறிவித்தல் கிடைக்கவில்லை. சில நேரங்களில் இவ்வாறு இடம்பெறுவதுண்டு. ஆயினும் கவனிப்புப்பக்கத்தில் இருந்ததால் கண்டுகொண்டேன்.
தமிழர் சிறுபான்மையினவியல் சொந்த ஆய்வாக எழுதியதுபோல் உள்ளது. இப்பபதம் துறைசார் ஆய்வு உட்பட்ட இடங்களில் இல்லை. மேலும். சிறுபான்மை அரசியல் போன்ற விடயங்களை ஆயும் இயலை சிறுபான்மையினவியல் எனலாம். என்று மலுப்பலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. AntanO (பேச்சு) 07:18, 29 மே 2023 (UTC)
- வணக்கம் ஆன்டன். நீங்கள் கூறுவதும் சரியாகத்தான் உள்ளது. ஆனால், இச்சொல்லாக்கம் மிகவும் பொருத்தமானதாக இருந்ததால் கவனம் செலுத்தினேன். நக்கீரன் அவர்களின் சொந்த ஆக்கம் எனக் கருதுவதால் இப்பக்கத்தை நீக்கிவிடலாம்.--நந்தகுமார் (பேச்சு) 09:33, 29 மே 2023 (UTC)
விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு
வணக்கம்!
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.
இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
Invitation to Rejoin the Healthcare Translation Task Force
You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 2 August 2023 (UTC)
உதவி
வணக்கம் ஐயா. சிரைக் கல், பின்புல இருள் நுண்ணோக்கி ஆகிய கட்டுரைகளில் செம்மையாக்கம் நிறைவுற்றதாக நீங்கள் கருதினால், துப்புரவு முடிந்த... எனும் பகுப்பினை இட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்தோடு, விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2024/தலைப்புகள் எனும் பக்கத்திலுள்ள முதல் அட்டவணையில் இற்றை செய்து உதவுமாறும் கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:33, 6 சனவரி 2024 (UTC)
- ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 08:05, 6 சனவரி 2024 (UTC)
பயிலரங்கு 2024
வணக்கம் ஐயா. தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய பயனர்களின் பங்களிப்பினைப் பெறுவதற்காக பயிலரங்கு 2024 (திருநெல்வேலி) திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிலரங்கத்தின் முக்கியக் கூறுகள்:
- அறிவியல், கலை ஆகிய துறைகளில் பணியாற்றும் கல்லூரி ஆசிரியர்கள் 50 பேருக்கு, தொடர்ச்சியாக இரு நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
- நாள் 1 - அறிமுகமும், அடிப்படைப் பயிற்சியும் (தளத்தில் உலவுதல், தொகுத்தல்). ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை மேம்படுத்தும் பணிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, விரிவாகக் கற்றுத் தரப்படும்.
- நாள் 2 - கட்டுரைகளில் முன்னேற்றப் பணிகளை புதிய பயனர்கள் செய்வர். பயிற்சி தருபவர்கள் உடனிருந்து உதவுவர்.
- 1000 கட்டுரைத் தலைப்புகள் அடங்கிய பட்டியலானது புதிய பயனர்களிடத்து தரப்படும். அவர்களுக்கு விருப்பமான கட்டுரையை அவர்கள் தேர்ந்தெடுத்து, மேம்பாட்டுப் பணிகளைச் செய்வர்.
- பயிலரங்கத்தின் முடிவில் மொத்தமாக 250 கட்டுரைகள் மேம்படுத்தப்பட்டிருக்கும் (ஒரு பயனர், 5 கட்டுரைகளை மேம்படுத்துவார்).
- புதிய கட்டுரையை வரைவு எனும் தலைப்பின்கீழ் உருவாக்குவதற்கு வழிகாட்டல் தரப்படும். நேரமிருப்பின், ஒவ்வொருவரும் ஒரு கட்டுரை மட்டும் எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுவர்.
உங்களிடம் கோரப்படும் உதவி:
பயிற்சி பெறும் புதிய பயனர்களுக்கு தரவேண்டிய பட்டியலை உருவாக்குவதற்கு உங்களின் உதவியை வேண்டுகிறேன். விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் துறைவாரியான தனித்தனி பட்டியல்கள் இணைப்புகளில் தரப்பட்டுள்ளன. படிமம் அல்லது அதன் கீழுள்ள சொல்லின் மீது சொடுக்கினால், பட்டியல் திறக்கும். மேம்பாடு தேவைப்படுவதாக நீங்கள் கருதும் கட்டுரைகளின் தலைப்பை அங்கு வரிசையாக இடலாம்.
சில குறிப்புகள்:
- திறன்பேசி, முதுகெலும்பி ஆகிய கட்டுரைகளில் ஒரு மேற்கோள்கூட இல்லை. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
- விலங்கு எனும் கட்டுரை கூகுள் தமிழாக்கம் வழியாக உருவாக்கப்பட்டு அப்படியே இருக்கிறது. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
- ஆறு எனும் கட்டுரையில் மேற்கோள்கள் பெயரளவில் உள்ளன. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
- மிகுந்த நுட்பமான கட்டுரைகளை மேம்படுத்துவது புதியவர்களுக்கு கடினமாக இருக்கக்கூடும். எனவே அவற்றைத் தவிர்க்கலாம்.
- மேம்படுத்துதலை எளிதாக செய்யக்கூடிய, தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்தோடு இருக்கவேண்டிய, முக்கியத் தகவல்களைக் கொண்டிருக்க வேண்டிய கட்டுரைகளின் தலைப்பை பட்டியலில் சேர்க்கலாம்.
பட்டியல்கள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின், விக்கிப்பீடியா பேச்சு:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் உரையாடுங்கள்.
மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:43, 7 பெப்பிரவரி 2024 (UTC)
Reminder to vote now to select members of the first U4C
- You can find this message translated into additional languages on Meta-wiki. Please help translate to your language
Dear Wikimedian,
You are receiving this message because you previously participated in the UCoC process.
This is a reminder that the voting period for the Universal Code of Conduct Coordinating Committee (U4C) ends on May 9, 2024. Read the information on the voting page on Meta-wiki to learn more about voting and voter eligibility.
The Universal Code of Conduct Coordinating Committee (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. Community members were invited to submit their applications for the U4C. For more information and the responsibilities of the U4C, please review the U4C Charter.
Please share this message with members of your community so they can participate as well.
On behalf of the UCoC project team,
RamzyM (WMF) 22:54, 2 மே 2024 (UTC)
நல்ல கட்டுரை- அழைப்பு
வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,68,905 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)
சிங்கப்பூர் முஸ்லிம் சங்கங்கள்
எனது முதல் கட்டுரையை திருத்தி அமைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா. நான் ஒரு எழுத்தாளர். உங்கள் மின்னஞ்சல் முகவரி வேண்டும். நன்றி Lovedotedit (பேச்சு) 23:58, 21 மே 2024 (UTC)
- வணக்கம். நீங்கள் தொகுப்பதற்கு உதவி தேவைப்பட்டால் இங்கேயே உரையாடலாம். பிற பயனர்களும் உதவுவார்கள். புரிதலுக்கு நன்றி --நந்தகுமார் (பேச்சு) 08:28, 22 மே 2024 (UTC)
- நன்றி ஐயா, மாரியூர் விக்கியில் தேடினேன் கிடைக்கவில்லை. காரைக்குடி பக்கம் என்கிறார்கள். Lovedotedit (பேச்சு) 09:10, 22 மே 2024 (UTC)
- மாரியூர் பூவந்திநாதர் கோயில்--நந்தகுமார் (பேச்சு) 09:15, 22 மே 2024 (UTC)
- மிக்க நன்றி Lovedotedit (பேச்சு) 09:20, 22 மே 2024 (UTC)
- ஒரு பகுப்பில் எப்படி தலைப்பு சேர்ப்பது? Lovedotedit (பேச்சு) 09:23, 22 மே 2024 (UTC)
- மிக்க நன்றி Lovedotedit (பேச்சு) 09:20, 22 மே 2024 (UTC)
கருத்தினைப் பதிவுசெய்ய வேண்டுகோள்
வணக்கம். இந்த நிகழ்வை நடத்துவதற்காக, நிதிக் கோரிக்கைக்கான விண்ணப்பத்தை விக்கிமீடியா அறக்கட்டளையிடம் தந்தோம். இந்த விண்ணப்பம் தற்போது மேல்-விக்கியில் பதிப்பிடப்பட்டுள்ளது. மேல்-விக்கிப் பக்கத்தின் இறுதியில் இருக்கும் Endorsements and Feedback எனும் பகுதியில் உள்ள Endorse விசைப்பட்டையைச் சொடுக்கி, உங்களின் ஆதரவு (அல்லது) எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விசைப்பட்டையைச் சொடுக்கும்போது, உதவிக் குறிப்புகள் கிடைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:26, 4 சூன் 2024 (UTC)
- ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 19:59, 4 சூன் 2024 (UTC)