பர்மா மீதான முதல் மங்கோலியப் படையெடுப்பு
பர்மா மீதான முதல் மங்கோலியப் படையெடுப்பு என்பது 1277-1287 வரை மங்கோலியப் பேரரசின் ஒரு பிரிவான குப்லாய் கானின் யுவான் அரச மரபால் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இராணுவச் சண்டைகளைக் குறிக்கிறது. இந்த படையெடுப்புகளால் 250 ஆண்டுகள் பழமையான பாகன் பேரரசானது பதவியில் இருந்து இறக்கப்பட்டது. மங்கோலிய இராணுவமானது தற்போதைய யுன்னானின் தெகோங் மற்றும் வடக்கு பர்மா முதல் தகவுங் வரையிலான பாகன் நிலப்பரப்புகளைக் கைப்பற்றியது.
1271-72ஆம் ஆண்டில் மங்கோலியர்கள் பாகன் பேரரசிடமிருந்து முதலில் காணிக்கையைக் கோரினர். சீனாவின் சாங் அரச மரபைச் சுற்றி வளைக்கும் தங்களது நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர்க இதைச் செய்தனர். மன்னர் நரதிகபதே மறுத்தபோது பேரரசர் குப்லாய் கான் 1273ஆம் ஆண்டு மற்றொரு குழுவை அனுப்பினார். மீண்டும் காணிக்கையைக் கோரினர். ஆனால் இதுவும் நிராகரிக்கப்பட்டது. 1275ஆம் ஆண்டு எல்லைப்பகுதிகளைப் பாதுகாக்குமாறு யுன்னான் அரசாங்கத்திற்குப் பேரரசர் ஆணையிட்டார். சாங் அரசமரபினர் தப்புவதற்கு இருக்கும் வழியை அடைப்பதற்காக அவர் இவ்வாறு செய்தார். இதற்குப் பாகன் பேரரசு ஒத்துழைக்காவிட்டால் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட எல்லைச் சண்டையை நடத்தலாம் எனவும் அனுமதி வழங்கினார். பாகன்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் அதன் இராணுவமானது மங்கோலிய இராணுவத்தால் எல்லைப்புறத்திற்கு 1277-78ஆம் ஆண்டு துரத்தப்பட்டது. சிறிது கால இடைவெளிக்குப் பிறகு 1281ஆம் ஆண்டு குப்லாய் கான் தனது கவனத்தைத் தென்கிழக்கு ஆசிய மீது திருப்பினார். பாகன், கெமர் பேரரசு, தாய் வியட் மற்றும் சம்பா ஆகிய நாடுகளிடம் இருந்து காணிக்கையைக் கோரினார். பர்மாவின் மன்னன் மீண்டும் மறுத்தபோது பேரரசர் வடக்கு பர்மா மீதான படையெடுப்புக்கு ஆணையிட்டார். இரண்டு வறண்டகால படையெடுப்புகளுக்குப் பின்னர் தகவுங் மற்றும் கன்லின் வரையிலான பகுதிகளை மங்கோலியர்கள் ஆக்கிரமித்தனர். பர்மாவின் மன்னன் கீழ் பர்மாவிற்குத் தப்பி ஓடும் நிலைக்கு ஆளாக்கப்பட்டார். மங்கோலியர்கள் வடக்கு பர்மாவை செங்மியன் மாகாணமாக மாற்றினார்.[1]
உசாத்துணை
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Yian, Goh Geok. 2010. “The Question of 'china' in Burmese Chronicles”. Journal of Southeast Asian Studies 41 (1). [Cambridge University Press, Department of History, National University of Singapore]: 125. https://www.jstor.org/stable/27751606.
ஆதாரங்கள்
[தொகு]