உள்ளடக்கத்துக்குச் செல்

புபொப 47

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புபொப 58 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புபொப 47
NGC 47
புபொப 47 (2MASS)
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுதிமிங்கில விண்மீன் குழாம்
வல எழுச்சிக்கோணம்00h 14m 30.6s[1]
பக்கச்சாய்வு-07° 10′ 03″[1]
செந்நகர்ச்சி0.019013[1]
தூரம்~236 Mly (சிகப்புவரி ஒளி அளவியல்)
வகைSB(rs)bc[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)2′.2 × 2′.1[1]
தோற்றப் பருமன் (V)13.5[1]
குறிப்பிடத்தக்க சிறப்புகள்none
ஏனைய பெயர்கள்
NGC 58,[1] PGC 967,[1] MCG 1-1-55,[1] IRAS 00119-0726[1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 47 (NGC 47) என்பது திமிங்கில விண்மீன் குழாமில் உள்ள தண்டு கருச்சுருள் அண்டம் ஆகும். இவ்விண்மீன் 1886 ஆம் ஆண்டு எர்ன்சிட் வில்லெம் லெபாரெசிட் டெம்பெல் என்பவரால் கண்டறியப்பட்டது. இவ்வானுறுப்பு புபொப 58 என்றும் முதன்மை பேரடைகளின் பட்டியல், முபேப 967 என்றும் அழைக்கப்படுகிறது. டெம்பெல் இவ்வானுறுப்பைக் கண்டறிந்து பட்டியலிட்டார் என்பதை அறியாமல் லூவிசு சுவிப்ட் என்பவர் இதை தான் கண்டறிந்த புதிய வானுறுப்பு என்று நினைத்து புபொப 58 என பட்டியலில் சேர்த்து விட்டார். இதனால் இந்த மாற்றுப் பெயர் அப்படியே நிலைத்து விட்டது. இவ்வண்டம் பார்ப்பதற்கு சிறியதாகவும், சுருள்வடிவ நெபுலா போன்று ஒளிர் உள்ளகம் கொண்டு நீள்வட்ட வடிவிலும் காணப்படுகிறது.

இந்த தண்டு கருச்சுருள் அண்டம் தோராயமாக பூமியில் இருந்து 236 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளதாக பாரம்பரிய சிகப்புவரி ஒளி அளவியல் மதிப்பீட்டு முறையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 47. பார்க்கப்பட்ட நாள் 2006-11-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_47&oldid=2746718" இலிருந்து மீள்விக்கப்பட்டது