மலமிளக்கி
Appearance
மலமிளக்கி (laxative) என்பது மலச்சிக்கலைச் சரிசெய்யும் உணவு அல்லது மருந்தாகும். ஆற்றல் வாய்ந்த மலமிளக்கிகளைப் பெருமளவு உட்கொண்டால் அது வயிற்றுப்போக்கை உருவாக்கி விடும். தூண்டி மலமிளக்கி, மசகு மலமிளக்கி என்று மலமிளக்கிகளைப் பிரிக்கலாம்.
மலமிளக்கிகளின் தவறான பயன்பாடு
[தொகு]உண்ணல் ஒழுங்கின்மை நோய் உள்ளவர்கள் தங்கள் எடையைக் குறைக்கம் பொருட்டு மலமிளக்கிகளைப் பயன்படுத்துவர். இஃது அறிவுப் பூர்வமற்ற செயல் ஆகும். ஏனெனில் மலமிளக்கிகள் செரிமானமடையாத பொருட்களையே வெளியேற்றுகின்றன.
அதுமட்டுமின்றி தூண்டி மலமிளக்கிகளைப் பலகாலமாய்ப் பயன்படுத்தினால் அதுவே மலச்சிக்கலை உண்டாக்கி விடும்.