14
Appearance
நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | கிமு 10கள் கிமு 0கள் 0கள் - 10கள் - 20கள் 30கள் 40கள்
|
ஆண்டுகள்: | 11 12 13 - 14 - 15 16 17 |
14 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 14 XIV |
திருவள்ளுவர் ஆண்டு | 45 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 767 |
அர்மீனிய நாட்காட்டி | N/A |
சீன நாட்காட்டி | 2710-2711 |
எபிரேய நாட்காட்டி | 3773-3774 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
69-70 -64--63 3115-3116 |
இரானிய நாட்காட்டி | -608--607 |
இசுலாமிய நாட்காட்டி | 627 BH – 626 BH |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 264 |
யூலியன் நாட்காட்டி | 14 XIV |
கொரிய நாட்காட்டி | 2347 |
கிபி ஆண்டு 14 (XIV) என்பது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "பொம்பெயசு மற்றும் அப்புலெயசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Pompeius and Appuleius) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 767" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 14 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதினான்காம் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]இடம் வாரியாக
[தொகு]உரோமப் பேரரசு
[தொகு]- உரோமைப் பேரரசை நிறுவிய அகஸ்ட்டஸ் இறக்கிறான். இவன் கடவுளாக அறிவிக்கப்படுகிறான்.
- அகஸ்டசின் பெறாமகன் திபேரியசு பேரரசன் ஆகிறான்.
- அகஸ்டசின் இறப்பை அடுத்து ரைன் ஆற்றின் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்;[1] செருமானிக்கசு, துரூசசு ஆகியோர் கிளர்ச்சியை அடக்கினர்.
- செருமனியின் படைத்தளபதியாக செருமானிக்கசு நியமிக்கப்பட்டான். இவன் நடத்திய போர் 16 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.[2]
- செருமனியின் ரூர் ஆற்றுக் கரைகளில் வாழ்ந்த மார்சி இனத்துக்கெதிராக செருமானிக்கசு பெரும் தாக்குதலை நடத்தினான். மார்சி இனத்தவர் பலர் கொல்லப்பட்டனர்.[3]
- கணக்கெடுப்பு ஒன்றின் படி, உரோமைப் பேரரசில் 4,973,000 குடிமக்கள் வாழ்ந்தனர்.
ஆசியா
[தொகு]- சீனாவை பஞ்சம் தாக்கியது. சீனர்கள் பலர் தன்னின உயிருண்ணிகளாயினர்.