1776
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1776 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1776 MDCCLXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1807 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2529 |
அர்மீனிய நாட்காட்டி | 1225 ԹՎ ՌՄԻԵ |
சீன நாட்காட்டி | 4472-4473 |
எபிரேய நாட்காட்டி | 5535-5536 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1831-1832 1698-1699 4877-4878 |
இரானிய நாட்காட்டி | 1154-1155 |
இசுலாமிய நாட்காட்டி | 1189 – 1190 |
சப்பானிய நாட்காட்டி | An'ei 5 (安永5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2026 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4109 |
1776 (MDCCLXXVI) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 15 - தெற்கு கரோலினா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடு இதுவாகும்.
- மார்ச் 17 - அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பொஸ்டன் நகரை விட்டு அகன்றனர்.
- ஏப்ரல் 12 - அமெரிக்க நாட்டில் உள்ள கரோலினா என்ற மாகாணம் ஐக்கிய இங்கிலாந்தின் காலணி மயத்திற்கு எதிப்பு தெரிவித்தது.
- ஜூன் 28 - ஜார்ஜ் வாஷிங்டனை கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த "தொமஸ் ஹின்க்கி" தூக்கிலிடப்பட்டான்.
- ஜூலை 4 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலையை அறிவித்தது.
- சூலை 11 - கப்டன் ஜேம்ஸ் குக் தனது மூன்றாவது கடற் பயணத்தை ஆரம்பித்தான்.
- ஆகஸ்டு 10 - அமெரிக்காவின் விடுதலைப் பிரகடன செய்தி லண்டனைப் போய்ச் சேர்ந்தது.
- ஆகஸ்டு 27 - பிரித்தானியப் படைகள் லோங் தீவில் ஜோர்ஜ் வாஷிங்டன் தலைமையிலான அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.
- செப்டம்பர் 6 - கரிபியன் தீவான குவாதலூப்பேயை சூறாவளி தாக்கியதில் 6000 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 26 - அமெரிக்கப் புரட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் பெஞ்சமின் பிராங்கிளின் பிரான்ஸ் புறப்பட்டார்.
- டிசம்பர் 26 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியர் நியூ ஜெர்சியில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.
நாள் அறியப்படாதவை
[தொகு]- அலெசான்றோ வோல்ட்டா 1776-77களில் வளிமங்களின் (வாயுக்களின்) வேதியல் பண்புகளை ஆய்ந்துகொண்டு இருந்தபோது, மெத்தேன் என்னும் ஒரு வளிமத்தைக் கண்டுபிடித்தார்.
பிறப்புக்கள்
[தொகு]- மார்ச் 24 - முத்துசுவாமி தீட்சிதர், இசை மும்மூர்த்திகளில் ஒருவர். (இ. 1835)
- ஆகஸ்டு 9 - அமேடியோ அவகாதரோ, இத்தாலிய வேதியியலாளர் (இ. 1856)
இறப்புக்கள்
[தொகு]- ஆகத்து 25 - டேவிடு யூம் எசுக்காத்துலாந்து நாட்டைச் சார்ந்த மெய்யியலார், (பி. 1711)
- நவம்பர் 30 - வில்லியம் ஹொட்சால் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (பி. 1718)