மே 2008
<< | மே 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMVIII |
மே 2008, 2008 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வியாழக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு சனிக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி வைகாசி மாதம் மே 14 இல் தொடங்கி ஜூன் 14 இல் முடிவடைந்தது.
சிறப்பு நாட்கள்
[தொகு]- மே 1 - மே நாள்
- மே 9 - ஆதிசங்கரர் ஜெயந்தி
- மே 19 - புத்த பூர்ணிமா
- மே 19 - வைகாசி விசாகம்
- மே 25 - இயேசுவின் திரு இருதயத் திருநாள்
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- மே 31: ஜப்பானிய விண்ணாய்வு கூடமான கீபோவை ஏற்றிக் கொண்டு நாசாவின் டிஸ்கவரி விண்ணோடம் ஏழு விண்வெளி வீரர்களுடன் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டது. (சிஎன்என்)
- மே 28: நேபாளத்தில் அதன் அரசியலமைப்பு அவை நாட்டை மக்களாட்சிக் குடியரசாக அறிவித்து 240 ஆண்டுகால மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. (சிஃபி)
- மே 26: எதியோப்பியாவின் முன்னாள் தலைவர் மெங்கிஸ்து ஹைலி மரியாம் மீது 1978இல் இடம்பெற்ற படுகொலைகளுக்காக அவர் இல்லாத நிலையில் எதியோப்பிய நீதிமன்றம் ஒன்று மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. (பிபிசி)
- மே 25:
- பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. (நாசா)
- இந்தியாவின் கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல்களில் பாரதீய ஜனதாக் கட்சி பெரும்பான்மையான இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. (ரேடியோ ஆஸ்திரேலியா)
- மே 23: பத்து பூத்தே தீவு (Pedra Branca) மீதான அரசுரிமையை அனைத்துலக நீதிமன்றம் சிங்கப்பூருக்கு வழங்கியது. சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் இருந்த 28 ஆண்டுக்கால சர்ச்சை முடிவுக்கு வந்தது. இத்தீவுக்குச் சற்றுத் தள்ளியுள்ள இரண்டு சிறிய தீவுத்திட்டுகள் - மிடல் ரோக்ஸ், சவுத் லெட்ஜ் ஆகியவை மலேசியாவுக்குச் சொந்தமானவை என முடிவு செய்தது. (சனல்ஏசியா நியூஸ்), (மலேசியாஇன்று)
- மே 22: 2008 சிச்சுவான் நிலநடுக்கம்: நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 51,151 ஆக அதிகரித்தது. (ஏஎஃப்பி)
- மே 20: சீனக் குடியரசின் (தாய்வான்) அரசுத் தலைவராக மா யிங்-ஜூ பதவியேற்றார். (பிபிசி)
- மே 19:
- தென்னாபிரிக்காவில் வெளிநாட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து 13 பேர் கொல்லப்ப்பட்டனர். கிட்டத்தட்ட 6,000 பேர் வெளியேறினர். (பிபிசி செய்திகள்)
- சிச்சுவான் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட 200 பேர் மண்சரிவில் சிக்கி இறந்தனர். (ஏபி)
- மே 18:
- கனடாவில் நிகழ்ந்த பனி வளைதடிப் பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிச் சுற்றில் ரஷ்யா கனடாவை 5-4 என்ற கணக்கில் வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. (ஏஎஃப்பி)
- 2008 சிச்சுவான் நிலநடுக்கம்: நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32,477 ஆக அதிகரித்தது. 14,000 பேரை காணவில்லை எனவும் 205,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (புளூம்பேர்க்)
- மே 13: இந்திய நகரமான ஜெய்ப்பூரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டு 180 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- மே 12: சீனாவின் சிச்சான் மாநிலத்தின் வென்சுவா மாவட்டத்தில் 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 12,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- மே 10: ஐக்கிய அமெரிக்காவில் வீசிய சூறாவளியில் ஒக்லகோமாவில் 6 பேரும் மிசூரியில் 4 பேரும் கொல்லப்பட்டனர். (நியூஸ்ஓகே)
- மே 9: ஹெஸ்புல்லா இயக்கம் லெபனானின் பெய்ரூட் நகரின் பெரும் பகுதியைக் கைப்பற்றியது. (ஏஎஃப்பி)
- மே 7:
- மே 6: சிலியில் சாய்ட்டன் எரிமலையின் சீற்றம் அதிகரித்தைத் தொடர்ந்து சாய்ட்டன், மற்றும் ஃப்பூட்டலேஃபு நகர மக்கள் அனைவரும் வெளியேறினர். (ராய்ட்டர்ஸ்)
- மே 4: சூறாவளி நர்கிஸ் பர்மாவைத் தாக்கியதில் குறைந்தது 22,000 பேர் கொல்லப்பட்டனர். பல கட்டிடங்கள் சேதமடைந்தன. (பிபிசி)
- மே 2: தெற்கு சூடானில் இடம்பெற்ற விமான விபத்தில் சூடானின் அமைச்சர் உட்படப் பலர் கொல்லப்பட்டனர். (AFP)
- மே 1:
- முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டை பெற்ற நளினி சிறீகரன் தன்னை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். (தினமலர்)
- சேர் மால்ட்டாவின் முதலாவது அரசு தலைவரும் உலகின் வயதில் கூடிய முன்னாள் அரசுத் தலைவருமான அந்தோனி மாமோ தனது 99வது அகவையில் காலமானார். (மால்ட்டா டைம்ஸ்)
ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- மே 31: கொழும்பு, வெள்ளவத்தையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டு, 10 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- மே 29:
- யாழ்ப்பாணம் மண்டைதீவுக்கு அருகில் உள்ள சிறுத்தீவு கடற்படைத்தளம் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணியினரால் தாக்கியழிக்கப்பட்டதில் 13 கடற்படையினர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- சிறுத்தீவு கடற்படைத் தளம், விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான மோட்டார் தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கொழும்புத்துறை பங்குத்தந்தை உட்பட 13 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- மே 28: யாழ்ப்ப்பாண நகரில் நாவாந்துறையில் ஊடகவியலாளர் பி. தேவகுமார் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். (புதினம்)
- மே 26: கொழும்பில் இருந்து பாணந்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டு 73 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- மே 23:
- கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டி அக்கராயன் வீதியில் இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். (புதினம்)
- வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் இலங்கை வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 2 அப்பாவிப் பொதுமக்கள் உடல் சிதறி கொல்லப்பட்டானர். 3 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- மே 22: மட்டக்களப்பு ஆரையம்பதியில் இலங்கைப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவால் 3 முஸ்லிம்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர். 7 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- மே 18: மன்னார், கருங்கண்டல்குளம் அணை ஊடாக வண்ணாங்குளம் நோக்கி இலங்கைப் படையினர் மேற்கொண்ட நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு, 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (புதினம்)
- மே 16:
- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். (தமிழ்நெட்)
- கொழும்பு மத்தியில் வான்படையினரின் சோதனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 7 காவல்துறையினர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டு 90 பேர் காயமடைந்தனர். (புதினம்), (பிபிசி)
- மே 13: யாழ்ப்பாணம் நெல்லியடியில் ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சட்ட ஆலோசகர் மகேஸ்வரி வேலாயுதம் அடையாளம் தெரியாதோரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். (புதினம்)
- மே 12: மட்டக்களப்பு பனிச்சங்கேணியில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த உறுப்பினரின் கைக்குண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டு, சிறுவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- மே 11: இலங்கையின் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இலங்கை அரசின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 20 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக் கட்சி 15 ஆசனங்களைக் கைப்பற்றியது. (புதினம்)
- மே 10: திருகோணமலை துறைமுகத்தில் ஆயுதங்கள் ஏற்றப்பட்ட நிலையில் இலங்கைப் படையினரின் ஏ-520 என்ற வழங்கல் கப்பல் கரும்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. (புதினம்), (டெய்லிமிரர்)
- மே 9:
- அம்பாறை நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு நிகழ்வில் 13 பேர் கொல்லப்பட்டு, 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (டெய்லி நியூஸ்)
- மன்னார், கறுக்காய்குளம் பகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வைத் தாம் முறியடித்ததாகவும் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு, 5 உடலங்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- மே 8: லண்டனில் சிறை வைக்கப்பட்டிருந்த கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் விடுவிக்கப்பட்டார். (டெய்லி மிரர்)
- மே 6: மன்னாரில் இலங்கைப் படையினரின் இரு முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் 9 படையினர் கொல்லப்பட்டு, படையினரின் கவச ஊர்தி கண்ணிவெடியில் சிக்கி அழிந்தது. (புதினம்)
- மே 1: மணலாறுப் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 2 இலங்கை அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர். (புதினம்)
இறப்புகள்
[தொகு]- மே 20 - பால்ராஜ், விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி (பி. 1965)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்